Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
12 வருஷம் கழிச்சு இந்தியில் ரீமேக் ஆகும் பொல்லாதவன்.. கணேஷ் வெங்கட்ராம் யார் கேரக்டர்ல நடிக்கிறார்?
சென்னை: 'பொல்லாதவன்' இந்தி ரீமேக்கில், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாகச் சொன்னார் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
வெற்றிமாறன் இயக்கிய முதல் படம் பொல்லாதவன். இதில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சந்தானம் உட்பட பலர் நடித்திருந்தனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ஹிட்டானது.

கன்ஸ் ஆஃப் பனாரஸ்
12 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம், இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தியில் இதற்கு 'கன்ஸ் ஆஃப் பனாரஸ்' என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சேகர் சூரி இயக்கும் இந்தப் படத்தில் கரண் நாத், தனுஷ் நடித்த கேரக்டரில் நடிக்கிறார். இவர் பகல்பன், ஏ தில் ஆஷிக்கானா, கார்கில் உட்பட சில இந்தி படங்களில் நடித்தவர்.

ராக்கி ஹேண்ட்சம்
நாதாலியா கவுர், ஹீரோயினாக நடிக்கிறார். இவர் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். தமிழில், ஜீவன் ரெட்டி இயக்கிய தாளம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தியில் கமாண்டோ, டிபார்ட்மென்ட் படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். ராக்கி ஹேண்ட்சம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அபிமன்யூ சிங்
வில்லனாக அபிமன்யூ சிங் நடிக்கிறார். இவர் தமிழில், வேலாயுதம், தலைவா, 10 எண்றதுக்குள்ள, தீரன் அதிகாரம் ஒன்று உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மற்றொரு வில்லனாக, கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். இவர், தமிழில் அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், இவன் வேற மாதிரி, தனி ஒருவன், தொடரி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

முதல் இந்திப் படம்
இந்தப் படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது. இதுபற்றி கணேஷ் வெங்கட்ராமிடம் கேட்டபோது, நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் இதுதான் என் முதல் இந்திப் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதுதான் இந்தியில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன்.

மாதுரி தீக்ஷித்
தமிழில் டேனியல் பாலாஜி நடித்த கேரக்டர்தான். ஆனால், இந்தியில் இந்த கேரக்டருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். இதன் டிரைலர் இன்று வெளியிடப்படுகிறது. பிரபல நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிடுகிறார். இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்றார்.