»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாயில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சித்நடிகருமான ஜெய் கணேஷ் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

அவருக்கு வயது 55. இவருக்கு மனைவியும், இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்தவர் ஜெய் கணேஷ்.

அதற்குப்பின் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு ஆகியஇரண்டு மொழிப் படங்களிலும் நடித்த இவர் 50 தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவள் ஒரு தொடர் கதை படத்தில் பொறுப்பற்ற மூத்த சகோதரனாக நடித்து ஏராளமான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர். அதற்குப்பின்ஆட்டுக்கார அலமேலு, பைலட் பிரேம்நாத், அண்ணன் ஒரு கோவில், உள்ளத்தை அள்ளித்தா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். திரிசூலம் படத்தில் சிவாஜிகணேசனுடனும், சங்கர் சலீம் சைமனில் ரஜினிகாந்துடனும் நடித்திருக்கிறார்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன். சம்பூர்ண ராமாயணம் மற்றும் மிஸியம்மா தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும்நடித்திருக்கிறார். தொலைகாட்சித் தொடர்கள் ரகுவம்சம் மற்றும் சக்தி ஆகியவற்றிலும் இவர் நடித்திருக்கிறார்.

பாலச்சந்தர் அதிர்ச்சி:

நடிகர் ஜெய்கணேஷ் மரணமடைந்த விஷயம் கேட்டு இயக்குநர் பாலச்சந்தர் அதிர்ச்சி தெரிவித்தார். உடனடியாக அவர், ஜெய் கணேஷ் வீட்டுக்குச் சென்று அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திங்கள்கிழமை மாலை ஜெய் கணேசின் இறுதிச்சடங்குகள் நடக்கும்.

யு.என்.ஐ.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil