Don't Miss!
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- News
சரியும் அதானி.. "உண்மை வெளியே வரும்".. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? போட்டுடைத்த சு. வெங்கடேசன்!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த போட்டோவை என் பொண்டாட்டி தான் லீக் பண்ணா.. ’கட்டா குஸ்தி’ விஷ்ணு விஷால் விளக்கம்!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் இப்போ 'கட்டா குஸ்தி' விஷ்ணு விஷாலாக மாறிவிட்டார். வரும் டிசம்பர் 2ம் தேதி அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவலாக வெளியாகிறது.
டோலிவுட்டின் பிரபல முன்னணி நடிகர் ரவி தேஜா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில், இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் பேட்டியில் நிர்வாண போட்டோவை வெளியிட்டது பற்றி விஷ்ணு விஷால் அளித்துள்ள விளக்கம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.
துணிவு
படத்தில்
விக்ரம்
வேதா
நடிகர்..
தூள்
கிளப்பும்
ஹாட்
அப்டேட்
வேற..
அஜித்
ரசிகர்கள்
வெயிட்டிங்!

ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் குஸ்தி
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான எஃப்ஐஆர் திரைப்படம் ஏகப்பட்ட ரசிகர்களின் ஃபேவரைட் படமாக மாறி பலரது பாராட்டுக்களையும் பெற்றது. தியேட்டரிலும், ஓடிடியிலும் இந்த படத்துக்கு நல்லதொரு ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 2 முதல் ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் கட்டா குஸ்தி போட ரெடியாகி விட்டார் விஷ்ணு விஷால்.

சும்மா ஒண்ணும் இந்த இடத்துக்கு வரல
சமீபத்தில் கட்டா குஸ்தி படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில், பேசிய நடிகர் விஷ்ணு விஷால் சும்மா ஒண்ணும் இந்த இடத்துக்கு நான் வரல.. இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு படம் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். பல நல்ல கதைகளை தேர்வு செய்ய என்னை வழிநடத்திய இயக்குநர்கள் உதவி செய்தனர் என உருக்கமாக பேசியிருந்தார்.

நிர்வாண சர்ச்சை
ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இந்த ஆண்டு டிரெண்டான நிலையில், உடனடியாக நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படம் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க செய்தது. இந்நிலையில், அந்த சர்ச்சை குறித்து விஷ்ணு விஷால் அளித்துள்ள விளக்கம் டிரெண்டாகி வருகிறது.

பொண்டாட்டி லீக் பண்ணிட்டா
இந்த போட்டோவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்தேன். ஆனால், வெளியிட விரும்பவில்லை. ரன்வீர் சிங் போட்டோ டிரெண்டான நிலையில், பொண்ணுங்க போடுறாங்க, ரன்வீர் சிங் போடுறாரு.. நீ போட்டா என்ன என சொல்லி என் மனைவி ஜுவாலா கட்டா தான் அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் லீக் பண்ணிட்டா என விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த காரணத்துக்காக
எவ்ளோ நாள் தான் நாமும் நல்ல பிள்ளையாகவே இருக்கிறது. சினிமா நடிகர்கள் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நடிக்க வேண்டும். நம்மை ஒரு சில கதாபாத்திரங்களை தாண்டி யாரும் யோசித்துப் பார்க்க மாட்டேன் என்கின்றனர். அந்த காரணத்துக்காகத் தான் இப்படியொரு போட்டோஷூட் நடத்தினேன் என விஷ்ணு விஷால் கூறியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களுக்கு செம ஃபன்னான அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.