»   »  நடிகை கவ்ஹர் தான் பணம் கொடுத்து அவரை அறையச் சொன்னார்: மாலிக் பேட்டி

நடிகை கவ்ஹர் தான் பணம் கொடுத்து அவரை அறையச் சொன்னார்: மாலிக் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் பணம் கொடுத்து தன்னை அறையுமாறு கூறியதாக அவரை அறைந்து கைதான அகில் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் சல்மான் கான் நடத்திய பிக் பாக்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி அவர் மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்களில் ஒருவரான முகமது அகில் மாலிக் என்பவர் கவ்ஹர் முஸ்லீமாக இருந்து கொண்டு அரைகுறை ஆடையில் நடனம் ஆடுவதாகக் கூறி அவரின் கன்னத்தில் அறைந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் மாலிக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கவ்ஹர்

கவ்ஹர்

நான் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். பல நாட்களாக வேலை தேடி அலைந்தேன். அப்போது தான் கவ்ஹர் கான் தன்னை அறையுமாறு கூறி எனக்கு பணம் கொடுத்தார். மேலும் அவரை அறைந்தால் தபாங் 3 படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அதனால் தான் அவரை அறைந்தேன் என்று மாலிக் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

நான் அறைந்தால் அது குறித்து போலீசில் புகார் அளிக்க மாட்டேன் என்று கவ்ஹர் எனக்கு வாக்குறுதி அளித்தார் என்று மாலிக் தெரிவித்துள்ளார்.

பேட்டி வேறு

பேட்டி வேறு

என் மீது அன்பு வைத்து ஆதரவு அளித்துள்ள என் குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள், மீடியா, சினிமா துறையினருக்கு நன்றி. நான் காயம் அடைந்தேன். ஆனால் அதனால் நொந்துவிடவில்லை. அதிர்ச்சி அடைந்தேன் ஆனால் இன்னும் உறுதியோடு உள்ளேன். முன்பை விட தற்போது வலிமையாக உணர்கிறேன். அந்த ஆள் அமைதியை போதிக்கும் என் அழகிய மதத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது என்று அறை வாங்கிய பிறகு கவ்ஹர் அளித்த பேட்டி தான் இது.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

பாலிவுட்டில் வாய்ப்புகள் பெற கஷ்டப்படும் கவ்ஹர் கான் விளம்பரத்திற்காக பணம் கொடுத்து தன்னை தாக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
Actress Gauhar Khan's attacker told that she paid him to do so.
Please Wait while comments are loading...