»   »  கவுதமி கமலை பிரிய ஸ்ருதி ஹாஸனுடனான மோதல் காரணமா?#Gautami

கவுதமி கமலை பிரிய ஸ்ருதி ஹாஸனுடனான மோதல் காரணமா?#Gautami

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மை காலமாக ஸ்ருதி ஹாஸனுக்கும், கவுதமிக்கும் இடையே பிரச்சனையாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் கவுதமி கமலை பிரிந்துள்ளார்.

திருமண வாழ்க்கை ஒரேயாண்டில் முடிய மனமுடைந்து நின்ற நடிகை கவுதமிக்கு நடிகர் கமல் ஹாஸன் ஆதரவளித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர்.

ஸ்ருதி

ஸ்ருதி

கமலின் லிவ் இன் பார்ட்னர் கவுதமி குறித்து செய்தியாளர்கள் முன்பு ஸ்ருதி ஹாஸனிடம் கேட்டதற்கு, அவர் என் தந்தைக்கு பிடித்தமானவர். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்தார். ஸ்ருதி என்ன மெச்சூராக உள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டினர்.

அம்மா

அம்மா

கவுதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று ஸ்ருதியிடம் கேட்கப்பட்டது. எனக்கு அம்மா என்று சரிகா உள்ளார். நான் ஏன் கவுதமியை அம்மா என்று அழைக்க வேண்டும் என்று ஸ்ருதி கூறியிருந்தார்.

சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

கமல் ஹாஸன், ஸ்ருதி நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தின் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் கவுதமி. இந்நிலையில் கவுதமி வடிவமைத்த ஆடைகள் பிடிக்கவில்லை என ஸ்ருதி ரகளை செய்ததாக செய்திகள் வெளியாகின.

கவுதமி

கவுதமி

எதற்கெடுத்தாலும் ஸ்ருதி கவுதமியுடன் மோதுவதாக கூறப்பட்டது. இது குறித்து ஸ்ருதியிடம் கேட்டதற்கு, எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லையே என்று பதில் அளித்தார்.

மோதல்

ஸ்ருதி ஹாஸன், கவுதமி இடையே ஏற்பட்ட மோதலும் இந்த பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று கூட கமல் ஸ்ருதியுடன் மட்டுமே புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.

English summary
Actress Gautami has announced her separation from Kamal Haasan after reports of tiff between her and Shruti emerged.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil