திங்கட்கிழமை திருமணம்.. திடீரென ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்!
சென்னை: கோலிவுட்டில் இந்த ஆண்டு ஏகப்பட்ட நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் விரைவில் கல்யாண சாப்பாடு போடப் போகும் ஜோடி என்றால் அது கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தான்.
ஆதி - நிக்கி கல்ராணி திருமணம், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் நடிகை ஹன்சிகாவும் டிசம்பர் மாதன் திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிவித்திருந்தார்.
நடிகை தமன்னாவும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் திங்கட்கிழமை கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், திடீரென இருவரும் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

3 வருடங்களாக காதல்
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் மற்றும் கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் தேவராட்டம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அந்த படத்தின் ஷூட்டிங்கிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டதாக தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் நிச்சயம் ஆகிவிட்டது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர்.

இருவீட்டார் சம்மதம்
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இரு வீட்டாரும் அவர்களது காதலுக்கு ஒரு வழியாக பச்சைக்கொடி காட்டிய நிலையில், உடனடியாக இந்த ஆண்டே திருமணத்தை செய்து கொள்ள இருவரும் முடிவு செய்து விட்டனர்.

திங்கட்கிழமை திருமணம்
கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனுக்கு வரும் திங்கட்கிழமை நவம்பர் 28ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ எளிமையான முறையில் தங்கள் திருமணத்தை நடத்த இருவருமே முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

ரிஷப்ஷன் இல்லை
கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரம்மாண்டமான ரிஷப்ஷன் ஞாயிற்றுக்கிழமை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏதும் இல்லை என்றும் சினிமா வட்டாரத்திலேயே சிலருக்கு மட்டுமே அழைப்பு என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

ப்ரீ வெட்டிங் ஷூட்
இந்நிலையில், திடீரென கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஈசிஆரில் உள்ள சொகுசு ரெசார்ட் ஒன்றில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். மேலும், அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் நடிகை மஞ்சிமா மோகன் வாழ்த்து பெற்று வருகிறார்.

ரசிகர்கள் வாழ்த்து
பச்சை நிற சுடிதார் அணிந்து கொண்டு நடிகை மஞ்சிமா மோகனும் காதல் பொங்க அவரை கைகளில் தாங்கிக் கொண்டு கெளதம் கார்த்திக்கும் கொடுத்துள்ள ரொமாண்டிக் போஸ் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. இருவரையும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

பத்து தல
கெளதம் கார்த்திக், சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. வரும் டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











