மீண்டும் இணையும் அஜித் – கெளதம் மேனன் கூட்டணி: ஏகே 62 படத்துல இப்படியும் ஒரு மாஸ் அப்டேட் இருக்கா?

சென்னை: கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித், தற்போது ஹெ வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து முதன்முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத ஏகே 62 படத்தில் கெளதம் மேனன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 61 அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

ஏகே 61 அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி வைத்துள்ளார் அஜித். ஏகே 61 என்ற டைட்டிலில் வேகமாக படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப் படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் வெறுத்துப் போன ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்டதை போல, இப்போது ஏகே 61 அப்டேட் கேட்டும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனுடன் முதன்முறையாக கூட்டணி

விக்னேஷ் சிவனுடன் முதன்முறையாக கூட்டணி

ஏகே 61 படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொருபக்கம் அஜித் ஜாலியாக பைக் ட்ரிப் அடித்து வருகிறார். இதனிடையே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், அஜித்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன் அல்லது பாலிவுட்டில் இருந்து மற்றொரு முன்னணி நடிகையை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித்துடன் மீண்டும் இணையும் கெளதம் மேனன்

அஜித்துடன் மீண்டும் இணையும் கெளதம் மேனன்

இந்த நிலையில், அஜித்துடன் இயக்குநர் கெளதம் மேனன் மீண்டும் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான 'என்னை அறிந்தால்' படம், ஆக்சனில் தெறிக்கவிட்டது. 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தை ஸ்டைலிஷான போலீஸ் ஆபிஸராக நடிக்க வைத்து, ரசிகர்களை மெர்சலாக்கினார் கெளதம் மேனன். ஆனால், இந்தமுறை இருவரும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக கெளதம்

ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக கெளதம்

இயக்குநராக வலம் வந்த கெளதம் மேனன், இப்போது பிஸியான நடிகராக கலக்கி வருகிறார். போலீஸ் ஆபிஸர், வில்லன் என வெரைட்டியான நடிப்பில் முத்திரை பதித்து வரும் கெளதம், விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக கெளதம் மேனன் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X