For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெறித்தனம் தான் போங்க.. தளபதி 67-ஏ தனி யூனிவர்ஸ் ஆகிடும் போல.. கெளதம் மேனனும் இணைந்து விட்டார்!

  |

  சென்னை: தளபதி 67 படத்தில் இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்துள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் அடுத்தடுத்து ஏகப்பட்ட பிரபலங்கள் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர்.

  வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ரகசியமாக தளபதி 67 படத்துக்கான பூஜை போட்டு ப்ரமோ வீடியோ மற்றும் ஷூட்டிங்கே பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த கெளதம் மேனன் தான் தளபதி 67 படத்தில் இணைந்துள்ள அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

  டாம் க்ரூஸ் படம் போல இருக்கும்.. தளபதி 67 சாதாரண கேங்ஸ்டர் படம்லாம் இல்லைங்கோ.. செம ஹாட் அப்டேட்! டாம் க்ரூஸ் படம் போல இருக்கும்.. தளபதி 67 சாதாரண கேங்ஸ்டர் படம்லாம் இல்லைங்கோ.. செம ஹாட் அப்டேட்!

  தனி யூனிவர்ஸா

  தனி யூனிவர்ஸா

  விக்ரம் யூனிவர்ஸ் உடன் தளபதி 67 இணையப் போகிறதா? அல்லது அது ஒரு தனி யூனிவர்ஸா என சந்தேகிக்கும் அளவுக்கு அடுத்தடுத்து பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் கமிட் ஆகி வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யாவை நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

  T67ல் கெளதம் மேனன்

  T67ல் கெளதம் மேனன்

  ஃபிலிம் கம்பேனியன் நடத்திய தமிழ் இயக்குநர்கள் ரவுண்ட் டேபிள் சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் கெளதம் மேனனிடம் எந்தவொரு பட பூஜை விழாவாக இருந்தாலும் நீங்க இருக்கீங்களே என தொகுப்பாளர் தூண்டில் போட ஹலிதா ஷமீம், அர்ச்சனா கல்பாத்தி படங்களில் எல்லாம் நான் இல்லை என பேசிய கெளதம் மேனன் தளபதி 67 படத்தில் இருக்கும் விஷயத்தை அம்பலப்படுத்தி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

  பர்மிஷன் கொடுத்த லோகேஷ்

  பர்மிஷன் கொடுத்த லோகேஷ்

  வாய் வரைக்கும் சொல்ல வந்துட்டு சட்டென ஒரு நிமிஷம் அருகே இருந்த லோகேஷ் கனகராஜை பார்த்து சொல்லலாமா எனக் கேட்ட உடனே அனைவருக்கும் புரிந்து விட்டது. லோகேஷ் கனகராஜும் சொல்லுங்க என பர்மிஷன் கொடுக்க தளபதி 67ல் தான் இணைந்துள்ளதை அறிவித்து விட்டார் கெளதம் மேனன்.

  மிஸ்ஸான யோஹன்

  மிஸ்ஸான யோஹன்

  பல வருடங்களுக்கு முன்பே கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி அட்டகாசமான யூபர் கூல் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை அந்த படம் அப்படியே ட்ராப் செய்யப்பட்டது. விஜய்யை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், தற்போது அவருடன் இணைந்து நடிக்கப் போகிறார் கெளதம் மேனன்.

  அடேங்கப்பா எத்தனை பேர்

  அடேங்கப்பா எத்தனை பேர்

  நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், சாண்டி என ஏற்கனவே வில்லன்கள் பட்டியல் நீண்டு கொண்டு போகும் நிலையில், தற்போது கூடுதல் இணைப்பாக கெளதம் மேனனும் இணைந்துள்ளார். மேலும், ஹீரோயின்களாக த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்தும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யூனிவர்ஸ் படமாக இருந்தால் கமல்ஹாசன் அல்லது சூர்யா கேமியோவாக வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Director Gautham Menon officially announces he will be the part of Thalapathy 67 in front of Lokesh Kanagaraj at the Film Companion Tamil Directors chat. Vijay fans exciting over the recent update.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X