»   »  ஓவரா தண்ணியடிச்சுட்டு பார்த்தால் கூட தெரியணும்: கவுதம் மேனன் கலகல

ஓவரா தண்ணியடிச்சுட்டு பார்த்தால் கூட தெரியணும்: கவுதம் மேனன் கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்க ஓவராக தண்ணியடிச்சுட்டு பார்த்தால் கூட இது என் படம் என தெரிய வேண்டும் என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் ஒரு வழுயாக நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


Gautham Menon's witty answer

கவுதமோட படங்களில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. எடுத்துக்காட்டாக என்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய ஹீரோ தனது தங்கையின் தோழியை காதலிக்கிறார். இதே போன்று உங்கள் படங்களில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருகிறதே. நீங்கள் ஏன் புதிதாக ஏதாவது முயற்சி செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.


அதற்கு கவுதம் கூறுகையில்,


நீங்கள் ஏதாவது எழுதி வைத்திருந்தால் கொடுங்கள். எனக்கு அவ்வளவு தான் தெரியும். ஒரு வேளை நீங்கள் ஓவராக தண்ணியடித்துவிட்டு யார் படம் என்றே தெரியாமல் தியேட்டருக்கு சென்றால் நான்கு காட்சிகளை பார்த்தவுடன் இது கவுதம் படம் என்பது தெரிய வேண்டும். அதற்காகவே அப்படி எடுக்கிறேன் என்றார்.

English summary
Director Gautham Menon explained as to why certain scenes are getting repeated in his movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil