»   »  கெத்து படத்திற்கு வரிவிலக்கு கேட்டு... கோர்ட்டுக்குப் போன உதயநிதி!

கெத்து படத்திற்கு வரிவிலக்கு கேட்டு... கோர்ட்டுக்குப் போன உதயநிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கெத்து திரைப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வழக்கொன்றைத் தொடர்ந்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ் மற்றும் விக்ராந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் கெத்து. முதன்முறையாக காமெடியைத் தவிர்த்து ஆக்ஷன் ஹீரோவாக உதயநிதி நடித்திருக்கிறார்.

Gethu Tax Exemption Udhayanidhi filed a case in Madras High Court

இந்நிலையில் தணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழக வரிவிலக்கு குழுவினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

கெத்து என்பது சுத்தமான தமிழ்ப்பெயர் இல்லை என்பதுதான் வரிவிலக்கு குழுவினரின் மறுப்பிற்கு காரணமாக இருந்தது.

ஆனால் கெத்து என்பது சுத்தமான தமிழ்ப்பெயர் தான் என்று தமிழ் அகராதியில் இருந்து சில மேற்கோள்களை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக் காட்டினார்.

இருந்தும் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு இல்லை என்று மறுத்து விட்டதால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை உதயநிதி தொடர்ந்திருக்கிறார்.

உதயநிதியின் மனுவில் "வரி விலக்கு அளிக்க மறுத்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். கடந்த 14-ந் தேதி முதல் கெத்து படத்துக்கு வசூலித்த கேளிக்கை வரியை திருப்பித்தர அரசுக்கு உத்தரவிடவேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்திற்கு இதேபோல வரிவிலக்கு அளிக்க மறுத்து, தற்போது அந்த மனு நீதிமன்ற விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Government Refusal to Grant Tax Exemption to the film Gethu, now Udhayanidhi Stalin filed a case in Madras High Court.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil