Just In
- 19 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 26 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 34 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- Sports
"இங்க வாங்க லைன்".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்!
- News
கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்
- Education
டிப்ளமோ முடித்தவரா நீங்க? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைக்கில் இருந்து கீழே விழுந்த அஜித்.. பதறிய ரசிகர்கள்.. டிரெண்டாகும் #GetWellSoonTHALA ஹாஷ்டேக்!
சென்னை: வலிமை படத்தின் ஷூட்டிங் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் கிடைக்கவில்லை என்று புலம்பி தீர்த்த தல ரசிகர்களுக்கு, இப்படியொரு சோகமான செய்தி கிடைத்துள்ளது.
எப்போதுமே துணிச்சலுடன் ஸ்டன்ட் செய்யும் நடிகர் அஜித், வலிமை ஷூட்டிங்கில், பைக்கில் ஸ்டன்ட் செய்யும் போது, கீழே விழுந்து லேசான காயம் பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தல அஜித்துக்கு காயம் ஏற்பட்ட செய்தி அறிந்த அவரது ரசிகர்கள், சமூக வலைதளத்தில் #GetWellSoonTHALA ஹாஷ்டேக் உருவாக்கி, சீக்கிரமே அவர் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றனர்.
|
சின்ன காயம் தான்
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்த போது, பைக்கில் இருந்து கீழே விழுந்த நடிகர் அஜித்துக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
|
ஷூட் நிக்கல
வலிமை படத்தின் ஷூட்டிங்கில், அஜித்துக்கு, இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதை அறிந்த படக்குழுவினர், உடனடியாக ஷூட்டிங்கை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், தனக்கு ஒண்ணுமில்லை என்றும், 20 நிமிட ஓய்வுக்குப் பிறகு, அந்த ஷூட்டை நிறைவு செய்து கொடுத்ததாகவும் தகவல்கள் டிரெண்டாகி வருகின்றன.
|
உங்க வலிமையை பார்க்கணும்
நடிகர் அஜித்துக்கு, இதற்கு முன்னதாக, பல முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றும் நிஜ ரேஸ்களிலும், ஏகப்பட்ட காயங்கள் பட்டுள்ளன. அவற்றை எல்லாம் அசால்ட்டாக கடந்து, மறுபடியும் தனது வலிமை தனது ரசிகர்களுக்கு நிரூபித்து காட்டி உள்ளார். இந்த முறையும் அஜித் மீண்டு வருவார், உங்க வலிமையை பார்க்க நாங்க வெயிட்டிங் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
காலையிலேயே கஷ்டமான செய்தி
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் குறித்த எந்தவொரு தகவலும், இதுவரை வெளியே கசியாமல் ரகசியம் காக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், காலையிலேயே ஒரு கஷ்டமான செய்தி, தல அஜித்துக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என அஜித் ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.
|
பிரார்த்தனை
வலிமை படத்தின் சண்டை காட்சியின் போது ஏற்பட்ட காயம், தல அஜித்துக்கு தீவிர பாதிப்பை கொடுத்துள்ளதாகவும், அஜித் ஓய்வில் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால், தான், இந்தளவுக்கு அஜித் ரசிகர்கள், ஹாஷ்டேக்கை உருவாக்கி, அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என தங்கள் பிரார்த்தனைகளை வைத்து வருகின்றார்களாம்.