அஜித் 61 படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்... யுவனுக்கு பதிலாக இவரா?
சென்னை : அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகவிருந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப் போயுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்திற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
படத்தின் பூஜை வரும் 16ம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடைபெறவுள்ளது.

வலிமை படம்
நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருந்த வலிமை படம் ஓமிக்ரான், கொரோனா பரவல் காரணங்களால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அஜித் 61 படம்
இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தின் பூஜை வரும் 16ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான வகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக அஜித் 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

3வது முறையாக இணையும் கூட்டணி
இந்தக் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணையவுள்ளது. வலிமை படம் தள்ளிப் போயுள்ள நிலையில், இந்தப் படத்தின் பூஜை குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரியில் சூட்டிங்
மேலும் இந்தப் படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்கவுள்ளதாகவும் சென்னையில் சில தினங்கள் நடக்கும் சூட்டிங் பின்பு ஐதராபாத்திற்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளிக்கு திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யுவனுக்கு பதிலாக ஜிப்ரான்?
இந்நிலையில் அஜித் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்துவரும் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வலிமை படத்தில் இயக்குநர் வினோத் மற்றும் யுவனுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் தற்போது ஜிப்ரான் அஜித் 61 படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











