»   »  பார்க்காதீங்க! ரன்பிர், ஐஸ்வர்யா படத்தை பார்க்காதீங்க: கோவா டிஜிபி கோரிக்கை

பார்க்காதீங்க! ரன்பிர், ஐஸ்வர்யா படத்தை பார்க்காதீங்க: கோவா டிஜிபி கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பனாஜி: ஏ தில் ஹை முஷ்கில் படத்தை புறக்கணிக்குமாறு கோவா டிஜிபி முக்தேஷ் சந்தர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் படம் கடந்த 28ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Goa DGP asks people to boycott Ae Dil Hai Mushkil

படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. படத்தில் அனுஷ்கா ரன்பிரிடம், முகம்மது ரஃபி? அவர் பாடுவது குறைவு, அழுவது அதிகமல்லவா? என்று கூறியுள்ளார். தனது தந்தையை கரண் அவமதித்துவிட்டதாக ரஃபியின் மகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல பாடகர் முகது ரஃபியின் ரசிகரான கோவா டிஜிபி முக்தேஷ் சந்தர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

முகமது ரஃபி இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவர். அவருக்கு யாரிடமும் இருந்து சான்றிதழ் தேவையில்லை. நீங்கள் ரஃபி ரசிகராக இருந்தால் இந்த படத்தை புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Read more about: goa, கோவா
English summary
Goa’s Director General of Police Muktesh Chander has appealed people to boycott Karan Johar’s latest film “Ae Dil Hai Mushkil” for allegedly insulting legendary playback singer Mohammad Rafi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil