காட்ஃபாதர் பாக்ஸ் ஆபிஸ்: புஷ்பா, RRR படங்கள் வரிசையில் 100 கோடி… மாஸ் காட்டிய சிரஞ்சீவி!
ஐதராபாத்: தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மோகன்ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சல்மான் கான், நயன்தாரா முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மிகப் பெரிய வெற்றிக்காக காத்திருந்த சிரஞ்சீவிக்கு காட்ஃபாதர் படத்தின் வசூல் செம்ம சர்ஃப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

வெற்றிக்காக காத்திருந்த சிரஞ்சீவி
டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் கடைசியாக 'ஆச்சார்யா' திரைப்படம் வெளியானது. சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முன் 2019ல் வெளியான 'சை நரசிம்மா ரெட்டி' படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆச்சார்யா வெளியானது. ஆனாலும் ஆச்சார்யா வெற்றி பெறாததால், சிரஞ்சீவி ரொம்பவே அப்செட்டில் இருந்தார். ஆச்சார்யாவைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடித்த 'காட்ஃபாதர்' இந்த மாதம் 5ம் தேதி வெளியானது. மோகன்ராஜா இயக்கியுள்ள காட்ஃபாதர், மலையாளத்தில் 200 கோடிக்கும் வசூலித்த லூசிபரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகாஸ்டார் VS சூப்பர் ஸ்டார்
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கிய முதல் படமான லூசிபரில், மோகன்லால், மஞ்சு வாரியர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொலிட்டிக்கல் திரில்லராக உருவான இப்படத்தில், மோகன்லால் கேங்ஸ்டராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். தெலுங்கிலும் அதேபோல அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் வெளியான காட்ஃபாதர் படத்தில், மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவியும், பிருத்விராஜ் கேரக்டரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானும் நடித்துள்ளனர். இதனால் இந்தப் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை தூண்டியது.

சூப்பர் கலெக்ஷன்
ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ், பல வருடங்களுக்குப் பிறகு 'காட்ஃபாதர்' படத்தை தயாரித்துள்ளது. அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான காட்ஃபாதர், முதல் நாளில் 38 கோடி வசூல் செய்தது. தசரா விடுமுறையை முன்னிட்டு வெளியானதால், முதல் இரண்டு நாட்களில் 69 கோடி கலெக்ஷன் ஆனது. இந்நிலையில், தற்போது பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தொடர்ந்து வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிரஞ்சீவி ஹேப்பி அண்ணாச்சி
5 நாட்களில் 100 கோடி கலெக்ஷனுடன் சிரஞ்சீவிக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளது காட்ஃபாதர். இதனால் மெகாஸ்டார் சிரஞ்சீவியும் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களின் வரிசையில், சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படமும் தெலுங்கு திரையுலகில் 100 நாள் சாதனையில் இணைந்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மம்முட்டி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 'பீஸ்மா பர்வம்' படம் தான் அது எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகலாம் என டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











