கவுண்டமணியால் வரமுடியவில்லை.. 74 வயதிலும் ரோபோ சங்கருக்காக ஓடி வந்த லெஜண்ட் செந்தில்

சென்னை: 85 வயதாகும் நடிகர் கவுண்டமணி கடைசியாக மனோஜ் பாரதிராஜாவின் மரணம் அறிந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் செந்திலும் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார். ரோபோ சங்கர் உயிரிழந்த நிலையில் பாரதிராஜா, கவுண்டமணி உள்ளிட்ட மூத்த நடிகர்கள் வரவில்லை.

ரோபோ சங்கர் மறைவு செய்தியை அறிந்ததுமே தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், சத்யராஜ், அதிதி ஷங்கர், பிரியா பவானி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், விஜய் பிரபாகரன், சூரி, கேபிஒய் பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Goundamani not came but Senthil attends Robo Shankar funearal

விஜய், கார்த்தி, ரவி மோகன், சிம்பு, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், குஷ்பு, ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தினர். காமெடி லெஜண்ட் செந்தில் மனசு கேட்காமல் இன்னொரு காமெடி நடிகரான ரோபோ சங்கருக்கு இறுதி மரியாதை செலுத்த நேரில் வந்த காட்சிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை: நடிகர் ரோபோ சங்கர் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பது மட்டுமின்றி தன்னை சுற்றியுள்ளவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் நபர். தனது மகளுக்கு மதுரை, சென்னை என தடபுடலாக திருமணத்தை நடத்தி முடித்த ரோபோ சங்கர் தனக்கு ஏதாவது நேர்வதற்குள் பேரனுக்கு காதுகுத்தி பார்த்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாக செப்டம்பர் 18ம் தேதி இரவு 9:05 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் சினிமா பிரபலங்களும், சின்னத்திரை நடிகர்களும் ஒன்று திரண்டு வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி சென்றனர்.

74 வயதிலும் வந்த செந்தில்: நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து மரணமடைந்து வருவது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளது. ஒவ்வொரு பிரபலத்தின் மறைவின் போதும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். கவுண்டமணியும் முடிந்த வரை வந்துவிடுவார். ஆனால், அவருக்கும் வயதாகி கொண்டிருக்கும் நிலையில், அவர் வராத நிலையில், செந்தில் வந்து ரோபோ சங்கருக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டுச் சென்றுள்ளார். 46 வயதிலேயே ரோபோ சங்கர் இப்படி நம்மை எல்லாம் விட்டுச் சென்றுவிட்டாரே என மனுஷன் கலங்கி விட்டார்.

அதிதி ஷங்கர் ஆறுதல்: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமான விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரோபோ சங்கர் உயிரிழந்த செய்தியை கேட்டு சோகத்தில் மூழ்கிய அதிதி ஷங்கர் ஓடோடி வந்து இந்திரஜா சங்கருக்கு ஆறுதல் கூறிய காட்சிகளும் அதிகம் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X