»   »  சினிமா, அரசியல் இரண்டையும் ஒரு கை பார்க்கும் கவுண்டமணி!

சினிமா, அரசியல் இரண்டையும் ஒரு கை பார்க்கும் கவுண்டமணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எத்தனை சந்தானம், சதீஷ்கள் வந்தாலும் கவுண்டமணிதான் காமெடி கிங். இன்றும் அவர் மைக் பிடித்தாலே அதிர்கிறது. காமெடி சேனலில் இன்னமும் ப்ரைம் டைம் கவுண்டமணிக்கு மட்டும் தான்.

கவுண்டமணியை திரையில் பார்த்துவிடமாட்டோமா என்று தான் ஏங்கி தவிக்கின்றனர் தமிழ் ரசிகர்கள். அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வரும் 25 ஆம் தேதி கவுண்டர் தரிசனம் கன்ஃபார்ம்டு. ஒரு படம் அல்ல இரண்டு படங்கள்.

Goundamani's two movies to hit this month

கவுண்டமணி நடித்து நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த வாய்மை படம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதில் சாந்தனு, பிரித்வி, தியாகராஜன், மனோஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். டாக்டர் பென்னி என்ற பெயரில் கவுண்டமணி படம் முழுக்க அலப்பறைக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக, அரசியல் நையாண்டி படத்தில் தூக்கலாம்.

Goundamani's two movies to hit this month

கவுண்டமணி நடித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் இன்னொரு படம் எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை. இந்த படத்தில் சினிமா கேரவன் வாடகை விடும் நபராக நடித்திருக்கிறார். இதில் இன்றைய சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள், இயக்குநர்கள் என சினிமாவை பதம் பார்த்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் கவுண்டமணியிடம் அரசியலும் சினிமாவும் மாட்டியிருக்கிறது. தலைவர் பாணியில் சொன்னால் மகிழ்ச்சி!

English summary
Legendary comedy actor Goundamani's two movies are going to release in this month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil