»   »  ஹீரோக்களே வேண்டாம்... அனுஷ்கா பக்கம் தாவிய கவுதம் மேனன்

ஹீரோக்களே வேண்டாம்... அனுஷ்கா பக்கம் தாவிய கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவம் ஒரு நல்ல இயக்குநரை ஆளாளுக்கு வைத்து செய்தால் கடுப்பாக மாட்டார்...? அப்படித்தான் ஹீரோக்களே வேண்டாம் என்று ஹீரோயின் கதைக்கு செல்லவிருக்கிறாராம் கவுதம்மேனன்.

அஜித் படமான என்னை அறிந்தால் வரை கவுதமுக்கு நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சூர்யாவுடன் பிரச்னை ஏற்பட்டு ட்ராப் ஆன உடனேயே அஜித் அழைத்து வாய்ப்பு கொடுத்தார்.

Goutham Menon shifts to heroine oriented stories

அப்போது தொடங்கிய சிம்புவின் அச்சம் என்பது மடமையடாவில் தான் கவுதமுக்கு ஆரம்பித்தது ஏழரை. அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. அடுத்து தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா தொடங்கினார். அதுவும் பாதியில் நிற்கிறது. தான் தயாரித்த நெஞ்சம் மறப்பதில்லை இன்னும் ரிலீஸ் ஆகாமல் சிக்கலில் இருக்கிறது. இடையில் விக்ரமை வைத்து நான்கு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்ட துருவ நட்சத்திரமும் ஆரம்பிப்பதாய் தெரியவில்லை.

இதனால் ஒட்டுமொத்த ஹீரோக்கள் மீதும் கடுப்பாகி விட்டார் போல... ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டை இயக்கப்போகிறார். ஹீரோயின் அனுஷ்கா என்கிறார்கள்.

கவுதமுக்காக ஸ்டைலிஷாக மாற வேண்டும் என்று ஜிம்மிலேயே கிடையாய் கிடக்கிறார் அனுஷ்கா.

English summary
Gautham Menon going to direct a heroine oriented film with Anushka as heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil