twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்க், 6 அடி இடைவெளி.. சினிமா ஷூட்டிங்கிற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

    By
    |

    புது டெல்லி: சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    Recommended Video

    ரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

    இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    படப்பிடிப்புகள் ரத்து

    படப்பிடிப்புகள் ரத்து

    இதன் காரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. டிவி சிரீயல்களின் ஷூட்டிங்கிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் சில மாநிலங்கள் அனுமதி அளித்துள்ளன

    கே.ஜி.எஃப் சாப்டர் 2

    கே.ஜி.எஃப் சாப்டர் 2

    சினிமா படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளவும் சில மாநிலங்கள் அனுமதி அளித்துள்ளன. அதன்படி சில படங்களின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. சுதீப் நடிக்கும் பாண்டம் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. கே.ஜி.எஃப் சாப்டர் 2 உள்பட சில படங்களில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. தமிழகம் உள்பட சில மாநிலங்கள் அடுத்த மாதம் அனுமதி வழங்கும் என்று கூறப்பட்டது.

    வழிகாட்டு நெறிமுறை

    வழிகாட்டு நெறிமுறை

    இதற்கிடையே படப்பிடிப்புக்கு முழு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு, சினிமா படப்பிடிப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது: படப்பிடிப்பின் போது நடிகர், நடிகைகள் தவிர அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். ஆடை மற்றும் உபகரணங்களை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கட்டாயம் கையுறை அணிய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மேக்கப் கலைஞர்கள்

    மேக்கப் கலைஞர்கள்

    பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது. மேக்கப் கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் கண்டிப்பாக பிபிஇ கிட் பயன்படுத்த வேண்டும். மேக்கப் ரூம், கேரவன், மேக்கப் அறைகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

    English summary
    central Government has issued guidelines for film shootings
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X