»   »  சூர்யா நிராகரிச்சப்போ மனசு வலிச்சது.. மனம் திறக்கும் கெளதம் மேனன்

சூர்யா நிராகரிச்சப்போ மனசு வலிச்சது.. மனம் திறக்கும் கெளதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யோஹான் படத்தில் இருந்து நடிகர் விஜய் விலகியது தனக்கு எந்த விட பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் துருவ நட்சத்திரம் படத்தில் நண்பர் சூர்யா, நடிக்க மறுப்பு தெரிவித்தது வலியை ஏற்படுத்தி விட்டது என்று இயக்குநர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.

பிரேம் சாய் இயக்கத்தில் நிதின் நடித்திருக்கும் 'கொரியர் பாய் கல்யாண்' படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படம் தமிழில் ஜெய் நடிக்க 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் தயாராகி வருகிறது.

இந்தப்படங்களின் புரமோசன் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் கௌதம் மேனன், தன்னுடைய படங்களில் இருந்து விஜய், சூர்யா விலகியது பற்றி கூறியுள்ளார்.

யோகான் கதை

யோகான் கதை

நடிகர் விஜய்யுடன் எனக்கு பழக்கமில்லை. அவருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படப்பிடிப்புக்கு 10 நாட்கள் முன்பு நான் கூறிய கதையைக் கேட்டு அவர் உறைந்து விட்டார். இந்தக் கதை நம்மூருக்கு அந்நியமாக இருக்கிறது என நினைத்தார். நம் மக்களுக்கான பிணைப்பு இல்லையென்று நினைத்தார். எனவே படத்தில் இருந்து விலகிவிட்டார்.

பாகுபலி போன்ற படம்

பாகுபலி போன்ற படம்

பாகுபலி படத்தை இப்போது எல்லா மாநிலங்களிலும் பார்க்கிறார்கள். அது ஒரு வரலாற்றுப் படம், அது அந்நியமான களம் தான். ஆனால் உணர்வுப்பூர்வமாக மக்கள் அதை ரசிக்கிறார்கள். அப்படித்தான் யோஹானும் இருந்திருக்கும்.

விஜய் – சூர்யா

விஜய் – சூர்யா

விஜய்க்கு நான் வேலை செய்யும் விதம் பற்றி தெரியாது. என் படங்கள் அனைத்தையும் அவர் பாத்திருக்கிறாரா என்று கூட தெரியாது. எனவே அது புரிந்துகொள்ள முடிகிறது. அதையே சூர்யா செய்யும்போது அது என்னை பாதித்தது. ஏனென்றால் அவருக்கு நான் வேலை செய்யும் விதம் தெரியும்.

விலகிய சூர்யா

விலகிய சூர்யா

சூர்யா என்னுடன் ஏற்கெனவே 2 படங்கள் பணியாற்றியுள்ளார். நீ எப்படி செய்வாய் என எனக்கு தெரியும், நம்பிக்கை உள்ளது எனக் கூறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நிறைய கலந்து ஆலோசித்திருக்கலாம், என்ன செய்யலாம் எனப் பேசியிருக்கலாம். அது மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நண்பர் என்று சொன்னவர் சட்டென புரிந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்

English summary
Director Gowtham Menon has opened his mind on actor Surya.
Please Wait while comments are loading...