Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்.. உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி.. ரொம்பவே ஃபீல் பண்ணி பாடிய ஜிபி முத்து!
சென்னை: பிக் பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் படுத்துக் கொண்டு ஜிபி முத்து பாடிய பாடல் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து கடந்த சீசனே வருகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் பிக் பாஸ் வீட்டுக்கெல்லாம் நான் போகலைங்க என பொசுக்கென சொல்லிய ஜிபி முத்து இந்த சீசனில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
மற்ற போட்டியாளர்களை விட ஜிபி முத்துவுக்குத் தான் இப்போதைக்கு பெரிய ஆர்மி உருவாகி இருக்கிறது.
ஜிபி
முத்துவையே
அழ
வைத்த
தனலட்சுமி..
முதல்
எவிக்ஷனே
நீ
தான்மா
என
திட்டித்
தீர்க்கும்
ஆர்மி!

புதிய ஹேர் ஸ்டைல்
படிய வாரிய தலையை பக்காவாக மாற்றி புதிய ஹேர் ஸ்டைல் உடன் வெர்ஷன் 2.0 வாகவே காட்சியளிக்கிறார் ஜிபி முத்து. மேலும், அவர் பேசுவது, அவர் செய்யும் செயல்கள் எல்லாமே மீம்களாக மாறி வருகின்றன. ஜிபி முத்துவின் அதிதீவிர ஆர்மியினர் தொடர்ந்து அவரை ஃபாலோ செய்து சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஓவியா ஆர்மியையே இவர்கள் ஓவர்டேக் செய்து விடுவார்கள் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அச்சச்சோ அழுதுட்டாரே
ஜிபி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை வெடித்த நிலையில், நான் உன்னை என்னோட மகளாட்டம் தான் நினைச்சு பேசினேன், ஆனால், நீ எப்படி நடிக்கிறன்னு மரியாதை எல்லாம் இல்லாமல் பேசக் கூடாது என பேச, அவ இவன்னு பேசாதீங்க என தனலட்சுமியும் எகிறினார். பின்னர், கண் கலங்கி ஹவுஸ்மேட்கள் முன்னாடி ஜிபி முத்து அழுத காட்சியை பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்
நீச்சல் குளம் அருகே படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த ஜிபி முத்து திடீரென எழுந்து ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்டேன் கண்மணி.. என் கண்மணி என கைகளை அசைத்து பாடியதை அமுதவாணனும் சாந்தியும் ரசித்துப் பார்த்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

தனலட்சுமிக்கு எதிராக
பச்சக் குழந்தைன்னு பாலூட்டி வளர்த்தேன்.. பாலை குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடின்னு ஜிபி முத்து பாடியதை கேட்ட ரசிகர்கள், குழந்தைன்னு நினைச்சு பேசிய தனலட்சுமி சண்டை போட்டதால் தான் தலைவர் வருத்தமாகி ரொம்பவே ஃபீல் பண்ணி பாடுறாருன்னு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஏகப்பட்ட கச்சேரி இருக்கு
ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை இன்னமும் ஏகப்பட்ட கச்சேரிகள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. ரொம்பவே எளிமையாகவும் வெளிப்படையாகவும் அவர் பேசி வருவதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த சீசன் டைட்டில் வின்னரே ஜிபி முத்து தான் என இப்பவே சொல்ல தொடங்கி விட்டனர்.

சன்னி லியோன் படத்தில்
டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சதீஷ், தர்ஷா குப்தா எல்லாம் நடித்துள்ள அந்த படம் விரைவில் திரைக்கு வரப் போகிறது. ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள நிலையில், சன்னி லியோன் பிக் பாஸ் வீட்டுக்கு புரமோஷனுக்கு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர்.