»   »  2017ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார் தெரியுமா? #பிளாஷ்பேக் 2017

2017ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார் தெரியுமா? #பிளாஷ்பேக் 2017

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு கூகுளில் உலக அளவில், இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் யார் என்று தெரிய வந்துள்ளது.

2017ம் ஆண்டு கூகுளில் இந்தியா மற்றும் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. 2017ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகை சன்னி லியோன் தான்.

இந்தியா

இந்தியா

2017ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் 11வது சீசனில் கலந்து கொண்டுள்ள அர்ஷி கான், சப்னா சவுத்ரி ஆகியோர் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

சங்கமித்ரா

சங்கமித்ரா

இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் 4வது இடத்தில் யூடியூப் பிரபலமான பாடகி வித்யா வோக்ஸ் உள்ளார். 5வது இடத்தில் சங்கமித்ரா ஹீரோயின் திஷா பதானி உள்ளார்.

பிரபாஸ்

பிரபாஸ்

இந்த ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை பாகுபலி. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஹாரி

ஹாரி

2017ம் ஆண்டு உலக அளவில் அதிகம் தேடப்பட்ட திரையுலக பிரபலங்கள் பட்டியலில் தொலைக்காட்சி நடிகை மெகன் மார்க்கெல் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் அடுத்த ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஹாரியை திருமணம் செய்ய உள்ளார். கெவின் ஸ்பேஸி 2வது இடத்தையும், கால் கடோட் 3வது இடத்தையும், லூயிஸ் சிகே நான்காவது இடத்தையும், பில் ஸ்கார்ஸ்கார்ட் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

English summary
Sunny Leone is the most searched Indian actress in Google in the year 2017 while Hollywood television actress Meghan Markle is the most searched actress in the world level.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X