ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டாச்சு… விறுவிறுப்பாக தொடங்கியது படப்பிடிப்பு !

சென்னை : இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை இன்று போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியது.

இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிக்க உள்ளார். ஸ்கைமேக் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

6 வயதிலேயே

6 வயதிலேயே

ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் தான் ஜி.வி. பிரகாஷ். இசையின் மீது இருந்த ஆர்வத்தால் தனது 6 வயதிலேயே ஜென்டில் மேன் திரைப்படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலை தனது மழழை மாறாமல் பாடினார் ஜி.வி.

இசையமைப்பாளராக

இசையமைப்பாளராக

வசந்தபாலன் இயக்கத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்ற வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக அப்படத்தில் இடம் பெற்ற வெயிலோடு உறவாடி பாடல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

ஹீரோவாக

ஹீரோவாக

இமையமைப்பாளராக இருந்து வந்த ஜிவி, டார்லிங் திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடித்திருந்தார். மியூசிக் மட்டும் வராது எனக்கு நடிக்கவும் வரும் என்பதை அந்த படத்தில் நிரூபித்து இருந்தார் ஜிவி. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

டார்லிங் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார், குப்பத்துராஜா என பல படங்களில் நடித்தார். இசை நடிப்பு என இரண்டிலும் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ்.

அடங்காதே, ஜெயில், பேச்சுலர்,4ஜி,காதலிருக்க பயமேன், காதலைத் தேடி நித்யானந்தா என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

ஐங்கரன்

ஐங்கரன்

அதர்வாவை வைத்து ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு ,ஜிவி பிரகாஷை வைத்து ஐங்கரன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் பொறியல் பட்டதாரியாக ஜிவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 4 வருடங்களாகியும் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் கிடப்பில் இருந்தது. தற்போது, ஐங்கரன் திரைப்படம் சோனிலிவ் தளத்தில் ஆகஸ்ட் 13ந் தேதி நேரடியாக வெளியாக உள்ளது.

படப்பிடிப்புக்கான பூஜை

படப்பிடிப்புக்கான பூஜை

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை இன்று போடப்பட்டது- இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிக்க உள்ளார். ஸ்கைமேக் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர்கள் கலைமகன் தயாரிக்கிறார்.

தலைவி படத்தில்

தலைவி படத்தில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தில் கங்கணா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இப்படத்தின் அனைத்துப்பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக தயாராக உள்ளது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

ஜிவி பிரகாஷ் குமார், பள்ளியில் படிக்கும் போதே நண்பராக பழகி வந்த சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 7 வருடங்கள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் ஜிவி சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தன் குழந்தைக்கு அன்வி என பெயர் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X