»   »  நடிப்பு... இசை... இரட்டைக் குதிரைச் சவாரியைத் தொடரும் ஜிவி பிரகாஷ்!

நடிப்பு... இசை... இரட்டைக் குதிரைச் சவாரியைத் தொடரும் ஜிவி பிரகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிப்பு, இசை என இரண்டு துறையிலும் என் பயணம் தொடரும் என்று ஜிவி பிரகாஷ் கூறினார்.

ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. விரைவில் திரைக்கு வரும் இந்தப் படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

மீண்டும் ஆனந்தியுடன்...

மீண்டும் ஆனந்தியுடன்...

படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜிவி பிரகாஷ் பேசுகையில், "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'வை தொடர்ந்து இந்த படத்திலும் ஆனந்தி எனது ஜோடியாக நடித்திருக்கிறார். டார்லிங் படத்துக்கு பிறகு சாம் ஆண்டன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இது இருக்கும்.

நம்பிக்கை

நம்பிக்கை

எனது 7-வது படமான இதைத் தொடர்ந்து புரூஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன் சார் இந்த கார்த்தி, மற்றும் சசி, ராஜீவ்மேனன் இயக்கும் படங்கள், சூப்பர்குட் பிலிம்ஸ் படங்களில் நடிக்கிறேன். என் மீது நம்பிக்கை இருப்பதால் என்னை நடிக்க அழைக்கிறார்கள்.

நடிப்பு - இசை

நடிப்பு - இசை

நடிப்பு, இசை இரண்டிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இதையே இனியும்ந தொடர்டிவேன்ப்பி. ல் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக உழைக்கிறேன். அது போல் நான் இசை அமைக்கும் படங்களும், பாடல்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ரஹ்மான் இசையில்...

ரஹ்மான் இசையில்...

நடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் இசை அமைக்கிறேன். ஏதாவது ஒரு புதிய இசை மனதில் தோன்றினால் அசை செல்போனில் பாடி வைப்பேன். பின்னர் அதை பாடல் ஆக்குவேன். நடிப்பு-இசை இரண்டிலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். நான் நடிக்கும் ராஜீவ்மேனன் படத்தில் எனது மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பது எனக்கு பெருமை.

நான்தான் இசை அமைக்கிறேன்

நான்தான் இசை அமைக்கிறேன்

இது தவிர நான் நடிக்கும் எல்லா படங்களுக்கும் நான்தான் இசை அமைக்கிறேன். சமீபத்தில் நான் இசை அமைத்த தெறி பட பாடல்கள் ‘ஹிட்' ஆகின. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' பட பாடல்களும் ஹிட் ஆகி இருக்கின்றன. எனது கடமையை சிறப்பாக செய்வதில் கவனமாக இருக்கிறேன்,'' என்றார்.

ரஜினி படத் தயாரிப்பாளர்கள்

ரஜினி படத் தயாரிப்பாளர்கள்

இயக்குனர் சாம் ஆண்டன் பேசும் போது, ‘‘இந்த கதை நன்றாக இருந்ததால் தான் ரஜினியின் ‘2.ஓ' படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இதை தயாரித்துள்ளது," என்றார்.

படத்தின் நாயகி ஆனந்தியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

English summary
GV Prakash says that he would like to continue both acting and music.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil