»   »  'எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து..' - மனசு மயங்கும் இளையராஜா பாட்டு!

'எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து..' - மனசு மயங்கும் இளையராஜா பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'ஒன்னவிட்டா யாரும் இல்ல
எங்கையில் உங்கையச் சேத்து
கைரேகை மாத்துது காத்து...'

- பாலாவின் நாச்சியார் படத்துக்காக இளையராஜா இசையில் உருவாகியுள்ள மனதை மயக்கும் டூயட் பாடல் இது. பாடலை எழுதியவர் தமிழச்சி தங்கபாண்டியன்.

GV Prakash renders a duet for Ilaiyaraaja

பாடியவர் ஜீவி பிரகாஷ் - ப்ரியங்கா. நாச்சியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஜீவி.

இந்தப் பாடல் பாடிய அனுபவத்தை மெய் சிலிர்க்க பகிர்ந்து கொண்டார் ஜிவி பிரகாஷ். "இந்த நாள் என் வாழ்வின் பொன்னாள். இசைஞானி இசையில் ஒரு பாடல் பாடிவிட வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை. இன்று அது நிறைவேறியது. மிக இனிமையா அந்தப் பாடலைப் பாட என்னை ராஜா சார் தேர்வு செய்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் என்மீது மிகுந்த அன்பு காட்டுபவர் இசைஞானி. இப்பாடல் அனைவரது மனதையும் வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும்," என்றார்.

ஜிவி பிரகாஷ் சிறுவயதிலேயே சிக்கு புக்கு ரயிலு.. பாடல் பாடியவர். தொடர்ந்து இசையமைத்து பாடி வருகிறார். சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் மெர்சல் படத்தில் புகழ்பெற்ற 'மெர்சல் அரசன்...' பாடல் இவர் பாடியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maestro Ilaiyaraaja has gave a chance to GV Prakash to render a duet for Bala's Naachiyaar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil