»   »  ஜல்லிக்கட்டு நடக்கணும்... பீட்டாவை தடை செய்யணும்! - ஜிவி பிரகாஷ்

ஜல்லிக்கட்டு நடக்கணும்... பீட்டாவை தடை செய்யணும்! - ஜிவி பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழரின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்... பீட்டா அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்று இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் இன்று நடந்து வருகிறது.

GV Prakash urhes state and center to ban PETA

நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டார். ஏராளமான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின்போது ஜிவி பிரகாஷ் கூறுகையில், "தமிழரின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டு எந்தத் தடையுமில்லாமல் நடக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை தர வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவிலிருந்தே தடை செய்ய வேண்டும்," என்றார்.

English summary
Actor - Musician GV Prakash urged the state and center to conduct Jallikkattu with out any restrictions.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos