»   »  தமிழில் ரீமேக்காகும் பலே பலே மகாதேவோ ...நானி வேடத்தில் ஜி.வி.பிரகாஷ்

தமிழில் ரீமேக்காகும் பலே பலே மகாதேவோ ...நானி வேடத்தில் ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் நானியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த பலே பலே மகாதேவோ திரைப்படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது.

தெலுங்கில் நானி ஏற்று நடித்த வேடத்தை தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஏற்று நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இளம் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது புரூஸ்லி படத்தில் நடித்து வருகிறார்.

GV Prakash will do Nani's role

இதனைத் தொடர்ந்து அவர் பலே பலே மகாதேவோ ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கில் நானிக்கு ஜோடியாக லாவண்யா திரிபதி நடித்திருந்தார், பிரபல தெலுங்கு இயக்குநர் மாருதி தாசரி படத்தை இயக்கியிருந்தார்.

வெறும் 9 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது. மேலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்துள்ளது.

GV Prakash will do Nani's role

மறதி நோயால் அவதிப்படும் நானி தனது காதலை எப்படிக் காப்பற்றினார் என்பதுதான் பலே பலே மகாதேவோ படத்தின் கதை. கதையில் ஒருசில மாற்றங்கள் செய்து இதனை தமிழில் எடுக்கவிருக்கின்றனர்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் என்பது தவிர வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனினும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான டார்லிங் திரைப்படம், தெலுங்கில் ஹிட்டடித்த பிரேம் கதா சித்ரமின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
G.V.Prakash Now Currently Busy in Bruce Lee Shooting. G.V.Prakash Next Signed tamil Remake of Hit Telugu Film Bale Bale Magadivoy, He is to do Nani's Role in Tamil Remake.
Please Wait while comments are loading...