Just In
- 44 min ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 10 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 15 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
"எய்ட்ஸ் இருக்கு".. காதலன் ஒரு மாதிரின்னா.. காதலி வேற லெவல்.. வெலவெலத்த போலீசார்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜீவா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 6 தேதி வெளிவருது ஜிப்ஸி.. படக்குழு அறிவிப்பு
சென்னை : ஜிப்ஸி படம் மார்ச் 6 தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஜிப்ஸி. இந்த படத்தில் நடிகர் ஜீவா,நடாஷா சிங், லால் ஜோஸ்,சன்னி வெயின்,சுசீலா ராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார் .

ஜிப்ஸி படம் ரசிகர்களால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் ஏனெனில் ராஜு முருகன் குக்கூ மற்றும் ஜோக்கர் என்ற இரு நல்ல படங்களை இயக்கியிருந்தார். ஜோக்கர் படம் இயக்குனர் ராஜு முருகனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இதனாலே ரசிகர்கள் இவரின் ஜிப்ஸி படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து வந்தனர். ஜிப்ஸி படம் ஒரு ஆண்டுக்கு முன்பே முழுமையாக முடிவடைந்து விட்டது ஆனால் படத்தில் வைக்கபட்டிருந்த காட்சிகளும் வசனங்களும் சென்சாரில் பலமுறை நிராகரிக்க பட்டு படம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. ஒரு வருடமாக இப்போது வரும் அப்போது வருமென எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஒரு வழியாக மார்ச்6 வெளியாகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ராஜுமுருகன் மற்றும் படக்குழு இணையத்தில் ஒரு சிவப்பு நிற போஸ்டரின் மூலம் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த போஸ்டரில் ஜீவா மட்டும் இடம்பெற்றிருக்கிறார் .
பொதுவாக இந்திய சினிமாக்களில் அரசியல் விமர்சன படங்கள் வருவது தொடர் பிரச்சனைகளே சந்தித்து வருவது இயல்பான விசயம்.இதில் சிறிய படங்கள் மட்டுமல்லாமல் பல பெரிய ஹீரோக்களின் படங்களே மாட்டி தவித்து இருக்கின்றனர் .

உலகநாயகன் கமலஹாசனின் பல படங்கள் இவ்வாறு பல போராட்டங்களுக்கு பிறகே மக்களை அடைந்தது வரலாறு. இந்தியா மட்டுமில்லை பல நாடுகளில் படங்களில் கடுமையாக அரசியல் பேசுவதையும் விமர்சிப்பதையும் அரசாங்கம் விரும்புவது இல்லை .இதற்கான சரியான தீர்வை நோக்கி பல வருடங்களாக சினிமா பயணித்து கொண்டேதான் இருக்கிறது .
தற்போதாவது மார்ச் 6 சொன்னபடி படம் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். படக்குழு உறுதியாக மார்ச் 6 ஜிப்ஸி படம் வரும் என்று உறுதியளித்துள்ளது. முக்கியமாக நடிகர் ஜீவா இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஜீவா இன்னும் ஒரு முழுமையான வெற்றி படத்திற்கு காத்திருக்கிறார் என்பது உண்மை மார்ச் 6 என்ன நடக்கபோகிறது என்பதனை பொருத்திருந்து பார்போம்.