என்னது...ஏகே 61 படத்திற்கு முன் ஹெச்.வினோத்தின் மற்றொரு படம் வர போகுதா?
சென்னை : அஜித்தை வைத்து அடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் டைரக்டர் ஹெச்.வினோத். நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் தற்போது ஏகே 61 படத்தை இயக்கி வருகிறார்.
ஏகே 61 படத்தின் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. அஜித் ஐரோப்பா டிரிப் முடிந்ததும் மீதமுள்ள காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஹெச்.வினோத் - அஜித்- போனி கபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி வரும் ஏகே 61 படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தள்ளிப்போகும் ஏகே 61
ஏகே 61 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என முதலில் தகவல் வெளியான நிலையில் தற்போது, டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு படம் தள்ளி போவதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த மாதம் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏகே 61 க்கு முன் மற்றொரு படமா
வினோத்தின் அடுத்த படமாக ஏகே 61 ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன் வினோத் இயக்கத்தில் உருவான மற்றொரு படம் ரிலீசாக உள்ளதாம். வினோத்தின் முதல் படமாக 2014 ல் நட்டி நடராஜ் நடித்த சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் செய்யும் தேதி தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இது தான் விவகாரமா
பல்வேறு நிதி பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல், நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த மனோபாலா தயாரித்த சதுரங்க வேட்டை 2 படம் அக்டோபர் 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தற்போது அறிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, த்ரிஷா லீட் ரோலில் நடித்துள்ளனர்.

இதை யாருமே எதிர்பார்க்கலியே
அரவிந்த் சாமிக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி உள்ளிட்ட அனைத்து ஃபைனான்ஸ் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு விட்டதாம். அதனால் படத்தை வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். அனைவரும் வினோத்தின் ஏகே 61 படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக சதுரங்க வேட்டை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











