twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கோடிக்கு பதில் 10 கோடி...நிஜத்திலும் அதிரடி காட்டும் ஹெச்.வினோத்

    |

    சென்னை : கதை திருட்டிற்காக ஒரு கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தவரிடமே 10 கோடி கேட்டு பதில் வழக்கு தொடர்ந்துள்ளார் டைரக்டர் ஹெ.வினோத். இதைக் கேட்டு கோலிவுட்டே ஆடிப்போய் உள்ளது.

    சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படமே வித்தியாசமான திரைக்கதையுடன் அமைந்து, அனைவரிடமும் பாராட்டை பெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். ஒரு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வட இந்தியா வரை சென்று போராடும் போலீசின் கதை.

    புரோக்கர் வேலை பார்க்குற.. எல்லை மீறிய சண்டை.. பிரசாந்த் vs மனோபாலா திடீர் மோதல்.. என்ன ஆச்சு?புரோக்கர் வேலை பார்க்குற.. எல்லை மீறிய சண்டை.. பிரசாந்த் vs மனோபாலா திடீர் மோதல்.. என்ன ஆச்சு?

    வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்

    வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்

    முதல் இரண்டு படங்களுமே பெரிய அளவில் பேசப்பட்டு, வெற்றி பெற்றதால் மூன்றாவதாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஹெச்.வினோத். அந்த படமும் ஹிட் ஆனதால் அஜித்தின் வலிமை அதைத் தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தை இயக்கும் பொறுப்பையும் வினோத்திடமே கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

    வலிமை கதை திருடப்பட்டதா

    வலிமை கதை திருடப்பட்டதா

    வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசாகி 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் ஏகே 61 படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளார் வினோத். இந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஜெய கிருஷ்ணா என்பவர், வலிமை படத்தின் கதை திருடப்பட்டது எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2016 ல் தான் இயக்கிய மெட்ரோ படத்தின் சீன்கள், கதை ஆகியவற்றை தனது அனுமதி இல்லாமல் காப்பி அடித்திருப்பதாகவும், காப்பி ரைட்ஸ் விதிகளை மீறியதால் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி வழங்க வேண்டும் என கேட்டு வழக்கு போடப்பட்டது.

    வலிமை ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை

    வலிமை ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை

    வலிமை படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யவும் ஜெய கிருஷ்ணா தடை கேட்டிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட், கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால் வலிமை படத்தின் ஓடிடி ரிலீசுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இதனால் திட்டமிட்டபடி ஜுலை மாதத்தில் வலிமை ஓடிடி.,யில் ரிலீசாவது உறுதியாகி விட்டது.

    ஒரு கோடிக்கு பதில் 10 கோடி

    ஒரு கோடிக்கு பதில் 10 கோடி

    இந்நிலையில், இப்படி ஒரு கதை திருட்டு வழக்கை போட்டு தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததற்காக 10 கோடி கேட்டு தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணா மீது டைரக்டர் ஹெச்.வினோத், அவதூறு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். தினமும் செய்திதாள்களில் வரும் நகை பறிப்பு, பைக் கேங்க்களின் அட்டகாசம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வலிமை படத்தின் கதையை தயாரித்ததாகவும் வினோத் தெரிவித்துள்ளார். இதை கேள்விப்பட்ட கோலிவுட்டில், ஆள பார்த்தா அமைதியானவர் போல இருக்கார். ஆனால் ஒரு கோடி கேட்டவரிடம் 10 கோடி கேட்டு கேஸ் போட போகிறாராம். மனுஷன் வேற லெவல் தான் என கூறி வருகிறார்கள்.

    English summary
    Director H.Vinoth has stated that he decided to file defamation case seeking 10 cr rupees for the attempt to tarnish his image by Jayakrishna. He said the screenplay of Valimai sourced daily news reports on chain snatching and bike gangs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X