»   »  'நண்பேன்டா' சந்தானத்திற்கு 36 வயசாச்சு!

'நண்பேன்டா' சந்தானத்திற்கு 36 வயசாச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவரான சந்தானம் இன்று தனது 36 வது பிறந்தநாளை 'சர்வர் சுந்தரத்துடன்' கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்.

மன்மதன் படத்தில் நடிகர் சிம்புவால் அறிமுகம் செய்யப்பட்ட சந்தானம் 'சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் ஹீரோக்களுக்கு இணையான ஒரு நிலையை எட்டினார்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற மாபெரும் ஹிட் படங்களைத் தூக்கி நிறுத்தியதில் சந்தானத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு.

சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி அவரது சிறந்த காமெடி வசனங்களை இங்கே ஒரு 'ரீவைண்ட்' செய்து பார்க்கலாம்.

பாஸ் என்கிற பாஸ்கரன்

பாஸ் என்கிற பாஸ்கரன்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இதில் சந்தானம் பேசும் "ஊருல பத்து, பதினைஞ்சு பிரெண்டு வச்சுருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு பிரெண்ட வச்சுக்கிட்டு நான் படுற பாடு அய்யோ அய்யயோ" என்கிற வசனம் இன்றுவரை நண்பர்களின் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது.

நண்பேன்டா

நண்பேன்டா

அதே படத்தில் இவர் பேசிய 'நண்பேன்டா' வசனம் இன்றளவும் சந்தானத்தின் புகழை பரப்பிக்கொண்டு தான் இருக்கிறது.உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்து 'நண்பேன்டா' என்ற பெயரில் படமொன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

முழுக்க, முழுக்க சந்தானத்தின் காமெடிக்காக ஓடிய படங்களில் கண்ணா லட்டு தின்ன ஆசையாவிற்கு ஒரு குறிப்பிட்ட இடமுண்டு. இதில் சந்தானம் பேசிய "எத்தனை நாளைக்கு தான் ஊரான் காதலை ஊட்டி ஊட்டி வளர்க்கிறது எனக்கும் ஊட்டி போய் டூயட் பாடணும்னு ஆசையிருக்காதா" என்ற வசனம் அடுத்து சந்தானம் ஹீரோவாக மாறப்போவதை சக நடிகர்களான ஆர்யா, ஜீவா, உதயநிதி போன்ற நடிகர்களுக்கு குறிப்பாக உணர்த்திச் சென்றது.

கலகலப்பு

கலகலப்பு

படத்தில் பெரிதாக கதை இல்லாவிட்டாலும் "மொறைப் பொண்ணும், மொட்டை மாடியில காயப் போட்டிருக்கற வத்தலும் ஒண்ணு. எப்போ எவன் தூக்கிட்டுப் போவான்னே தெரியாது" போன்ற சந்தானத்தின் காமெடி வசனங்களுக்காகவே வெற்றிகரமாக ஓடியது இப்படம்.

இது கதிர்வேலன் காதல்

இது கதிர்வேலன் காதல்

படத்தில் உதயநிதி ஹீரோவா இல்லை சந்தானம் ஹீரோவா என்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய படங்களில் இப்படத்திற்கு ஒரு தனியிடமுண்டு. இதில் இவர் பேசிய "புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கனும், பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கனும்" வசனம் தற்போது காதலிக்கும் நண்பர்களுக்கு அறிவுரை கூற பயன்பட்டு வருகிறது.

இதுபோன்ற வசனங்கள் மூலம் இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்ற சந்தானத்திற்கு, இந்தப் பிறந்த நாள் ஒரு இனிய தொடக்கமாக அமைய வாழ்த்துக்கள்!

English summary
Comedy Actor Santhanam is turning 36 years old today and ThatsTamil Wishes the Actor for all the Success in his life and career.Happy Birthday Santhanam!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil