»   »  எஸ்.பி.பி பிறந்த தினம் இன்று

எஸ்.பி.பி பிறந்த தினம் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களை தனது குரலால் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் கட்டிப் போட்டு வைத்துள்ள பின்னணிப் பாடகர் எஸ்.பி.பியின் 69 வது பிறந்த தினம் இன்று. பாடகர் மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறைமைகள் கொண்டவர். 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில்(தற்போது ஆந்திரப் பிரதேசம்) எஸ்.பி. சம்பமூர்த்தி- சகுந்தலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்.

5 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்கள் எனப் பெரிய குடும்பத்தில் பிறந்த எஸ்.பி.பியின் அப்பா ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த எஸ்.பி.பி, தனது தந்தையின் ஆசைப்படி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். டைபாயிடு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட எஸ்.பி.பி சிறிது காலம் வீட்டில் இருந்து விட்டு பின்னர், சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

1964ம் ஆண்டு அமேட்டூர் கல்லூரயில் சென்னையை மையமாகக் கொண்டு ஒரு தெலுங்கு இசை நிறுவனம் பாட்டுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது, அதில் கலந்து கொண்ட எஸ்.பி.பிக்கு முதல் பரிசு கிடைத்தது. இதுதான் அவரின் பாடல் ஆர்வத்தை மேலும் தூண்டி பின்னணிப் பாடகராக வேண்டும் என்ற ஆர்வத்தை விதைத்தது.

முதன் முதலில்

முதன் முதலில்

1966 ம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு முதல் பாடல் தாய் மொழியிலேயே அமைந்தது. தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழில் முதன்முதலில் பாடியது 1969 ம் ஆண்டு காதல் மன்னன் ஜெமினிகணேசனின் சாந்தி நிலையம் படத்திற்கு "இளையகன்னி " என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரை படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல் முதலில் இவர் குரலில் வெளிவந்து விட்டது.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

1968 1969 வது போன்ற ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மற்றும் ஜெய் சங்கர் ஆகியோருக்காக சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் மற்றும் ஜானகி ஆகியோருடன் இணைந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இளையராஜா, எஸ்.பி.பி மற்றும் ஜானகி ஆகிய மூவரும் இணைந்த வெற்றிக் கூட்டணியானது 1970 களில் உருவானது.

1980ம் ஆண்டு முதல் தேசிய விருது

1980ம் ஆண்டு முதல் தேசிய விருது

சங்கராபரணம் படம் 1980 ம் ஆண்டு தெலுங்கில் இசையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்ட ஒரு திரைப்படம். முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கர்நாடக சங்கீதம் கற்கா விட்டாலும் கேள்வி ஞானத்��ை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி.பி இதில் பாடல்களை பாடியிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மூலம் உலகளவில் இவர் கவனம் பெற்றார். அதே ஆண்டில் இந்தப் படத்தின் பாடல்களுக்காக தேசிய விருதையும் வென்றார்.

சல்மான்கானுக்கு பாடகராக

சல்மான்கானுக்கு பாடகராக

1989 ம் வருடத்தில் இருந்து இந்தி நடிகர் சல்மான்கானுக்காக பாட ஆரம்பித்தார், பல மிகச் சிறந்த காதல் பாடல்களை லதா மங்கேஷ்வருடன் இணைந்து இந்தித் திரையுலகில் சல்மானுக்காக பாடியிருக்கிறார்.

மின்சார கனவு

மின்சார கனவு

1996 ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கத் தாமரை மகளே பாடலுக்காக தேசிய விருதை வென்றார். தமிழில் எவ்வளவோ மிகச் சிறந்த பாடல்களைப் பாடியிருந்தாலும் காதலும் இளமையும் சரிசமமாகக் கலந்த இந்தப் பாடலுக்காக மட்டுமே அவர் தேசிய விருதை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாதன் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை

விஸ்வநாதன் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை

தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இசையில் பாட ஆரம்பித்த எஸ்.பி.பி நேற்று இசையமைக்க வந்த ஜி.வி.பிரகாஷ் வரை அனைவரின் இசையிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். இளையராஜா, தேவா, வித்யாசாகர், எ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜா என்று கிட்டத்தட்ட அணைத்து இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடிய ஒரே ஒரு பாடகர் எஸ்.பி.பி யாக மட்டும் தான் இருக்க முடியும்.

40 வருட சினிமா 40000 பாடல்கள்

40 வருட சினிமா 40000 பாடல்கள்

தனது 40 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை சுமார் 40000 பாடல்கள் வரை பாடி உலக சாதனையைப் படைத்துள்ளார்.

நான்கு மொழிகளில் தேசிய விருது

நான்கு மொழிகளில் தேசிய விருது

இதுவரை இவர் பாடிய நான்கு மொழிகளிலும் தேசிய விருதினை வென்றிருக்கிறார்.

விருதுகளால் ஆன வாழ்க்கை

விருதுகளால் ஆன வாழ்க்கை

6 முறை தேசிய விருது, நான்கு முறை பிலிம்பேர் விருது, 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றை பெற்ற ஒரே கலைஞர் இவராகத்தான் இருப்பார்.

இசையமைத்த படங்கள்

இசையமைத்த படங்கள்

மொத்தம் 45 படங்களுக்கு மேல் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

நடிகராக

நடிகராக

தென்னிந்திதிய மொழிகளில் இதுவரை சுமார் 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

பின்னணிக் குரல்

பின்னணிக் குரல்

நடிகர் கமல்ஹாசன், ரகுவரன், பாக்யராஜ், சல்மான்கான் மற்றும் ரஜினி ஆகியோரின் படங்களை பிற மொழியில் டப் செய்யும் போது அவர்களுக்காக பிற மொழிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இதுவரை கமலின் 120 படங்களில் அவருக்காக பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பின்னணிக் குரலுக்காக ஆந்திர அரசின் நந்தி விருதை 2 முறை பெற்றிருக்கிறார்.

சின்னத் திரையிலும்

சின்னத் திரையிலும்

நதி எங்கே போகிறது என்ற நெடுந்தொடரில் தொடக்கி தற்போது ஏர்டெல் சூப்பர் சிங்கர் வரை சின்னத் திரையில் நடிப்பு மற்றும் நடுவர் என பல்வேறு துறைகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

திரை உலகில் ஆயிரம் பேர் நட்சதிரங்களாக மின்னலாம் ஆனால் துருவ நட்சத்திரமாக சிலபேரே ஜொலிப்பார்கள், எஸ்.பி.பி ஒரு துருவ நட்சத்திரமாக மாறிவிட்டார்.

English summary
Today is SP Balasubramaniam 69 th Birthday (fondly called SPB) who has sung for many music composers in the industry.Several film personalities wished the ace singer through Twitter and Facebook and S P Charan - the son of the legendary singer - has promised online that he'd convey all the wishes to his father.Despite the entry of many singers in the circuit, SPB remains a big draw and people across the globe adore his voice. Here's wishing him many more successful ventures in the road ahead!
Please Wait while comments are loading...