»   »  த்ரிஷாவுக்கு இன்னிக்கு பிறந்த நாள்... வயசு? பதினெட்டுதான்!! #HBDTrisha

த்ரிஷாவுக்கு இன்னிக்கு பிறந்த நாள்... வயசு? பதினெட்டுதான்!! #HBDTrisha

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றும் இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவுக்கு இளமை, நடிப்பில் அசத்தும் அவருக்கு எத்தனை வயது என்பதெல்லாம் இப்போது எதற்கு? ஆனால் நடிக்க வந்த நாளிலிருந்து கணக்கிட்டால் அவருக்கு வயது 18 தான் (பிறந்த நாளும் அதுவுமா... கொஞ்சம் சந்தோஷப்படட்டுமே!).

1999-ல் ஜோடி படம் மூலம் அறிமுகமான த்ரிஷா, 2000-களில் உச்ச நடிகையாகக் கோலோச்சினார்.

Happy Birthday Trisha

சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர, கிட்டத்தட்ட அத்தனை முன்னணி நாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து, இப்போது ஜோடியில்லாம் சோலோ நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போதும் ரஜினியின் நாயகியாகும் கனவும் நம்பிக்கையும் குறையாமல் காத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் இன்றும் முதல் நிலை நாயகிகளுள் ஒருவர் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள த்ரிஷா, அதிக சம்பளம் வாங்கும் நாயகியர்களுள் ஒருவராகவே உள்ளார்.

தமிழ், தெலுங்கில் இதுவரை 60 படங்களைத் தாண்டிவிட்ட த்ரிஷா கைவசம் இப்போது தமிழில் மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மலையாளத்தில் ஹே ஜூடே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

English summary
Trisha is today celebrating her birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil