»   »  ''உயிர் என்று உன்னை ஒருநாளும் சொல்ல மாட்டேன்''...விஜய்யை நெஞ்சார வாழ்த்தும் ரசிகர்கள்!

''உயிர் என்று உன்னை ஒருநாளும் சொல்ல மாட்டேன்''...விஜய்யை நெஞ்சார வாழ்த்தும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் இன்று தன்னுடைய 42வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் ரத்த தானம், அன்ன தானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுதவிர சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் ரசிகர்களின் ஆதிக்கமே இன்று அதிகம் நிறைந்து காணப்படுகிறது. #hbdvijay, #hbddarlingofmassvijay என்று பல்வேறு ஹெஷ்டேக்குகளை உருவாக்கி இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் வாழ்த்து மழையில் ஒருசில துளிகளை இங்கே காணலாம்.

100 ஆண்டுகள்

100 ஆண்டுகள் தாண்டி ஆனந்தமாய் வாழ்ந்திட வேண்டும் என்று நீதி, விஜய்யை வாழ்த்தியிருக்கிறார்.

மூன்றெழுத்து

விஜய் என்னும் வார்த்தை எங்களுக்கு உயிரெழுத்து போல என்று பாலா, விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

அமைதியா

அமைதியா இருந்து சாதிக்கணும் என்று கற்றுக் கொடுத்த தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வெங்கட் கூறியிருக்கிறார்.

தடைகளை உடைப்பது

தடைகளை உடைப்பது தான் தளபதி ஸ்டைல் என்று கூலிங்கிளாஸ் குணா வாழ்த்தியிருக்கிறார்.

ஜில்லா

ஜில்லா படத்தின் பாடல் வரிகளைப் பதிவிட்டு வேதா வாழ்த்தியிருக்கிறார்.

கில்லி

எல்லா ஏரியாவிலும் கில்லி என்று விஜய் கூறும் வசனத்தைப் பதிவிட்டு ஜெயக்குமார் வாழ்த்தியிருக்கிறார்.

இதுபோல மேலும் பல ரசிகர்களின் வாழ்த்துக்களால் #hbdvijay ஹெஷ்டேக் தொடர்ந்து தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்தலாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...

English summary
Today Actor Vijay Celebrating His 42nd Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous Actor a wonderful birthday ahead.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil