Just In
- 14 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 26 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 2 hrs ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Don't Miss!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- News
இந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அழகு சிலை அனுபமாவுக்கு ஹேப்பி பர்த் டே.. சுருட்ட முடி சுழலியை சீக்கிரமே தமிழ் படத்துல பார்க்கலாம்!
சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நாயகியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன், தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து, தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.
2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரனுக்கு ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
— Anupama Parameswaran (@anupamahere) February 18, 2020 |
24 வயசு தான் ஆகுது
1996ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிறந்த அனுபமா பரமேஸ்வரன், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா சபாஸ்டியன் நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில், மேரி ஜியார்ஜ் கதாபாத்திரத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார். தனது பிறந்த நாளை முன்னிட்டு, ட்வீட் போட்டுள்ள அனுபமா, தனக்கு 24 வயது ஆகிறது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் அறிமுகம்
பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் படத்தில் நடித்து அசத்திய, அனுபமா பரமேஸ்வரனுக்கு, கோலிவுட்டிலும் ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர். துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், த்ரிஷா நடிப்பில் வெளியான கொடி படத்தில், தம்பி தனுஷுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கோலிவுட்டில் தடம் பதித்தார்.
|
டிக் டாக் பேபி
கொடி படத்தில் இடம் பெற்ற "ஏய் சுழலி" பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அனுபமாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அதே பாடலுக்கு, அனுபமா பரமேஸ்வரன் பண்ண டிக் டாக் வீடியோ, இளைஞர்கள் மத்தியில், அவருக்கான தனி இடத்தையே பிடித்து கொடுத்தது. அனுபமாவின் பிறந்த நாளான இன்றும், அந்த டிக் டாக் வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
|
இளைஞர்களின் க்ரஷ்
அனுபமா பரமேஸ்வரன் சமூக வலை தள பக்கங்களில் எப்போதுமே ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார். டிக் டாக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது. இளைஞர்களின் கனவு தேவதையாகவும், சமீபத்திய க்ரஷ்ஷாகவும் அனுபமா இருக்கிறார்.
|
அதர்வாவுக்கு ஜோடி
கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் தெலுங்கில் வெளியான ராட்சசன் ரீமேக் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கண்ணன் இயக்கத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வருகிறார். விரைவில், அந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
|
ராஷ்மிகா வாழ்த்து
அனுபமா பரமேஸ்வரனை போலவே, இளைஞர்களின் சமீபத்திய க்ரஷ்ஷான நடிகை ராஷ்மிகா மந்தனா, அனுபமாவின் பிறந்த நாள் காமன் டிபியை நேற்று, ரசிகர்களுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டு, ஹேப்பி பர்த்டே அனு, இந்த சர்ப்ரைஸ் எப்படி இருக்கு, என அவருக்கு, இன்பதிர்ச்சி, கொடுக்க அனுபமா, ராஷ்மிகாவுக்கு நன்றி தெரிவித்தார்.
— Anand AK (@Anand18820406) February 18, 2020 |
சுத்திப் போடணும்
தனது 24வது பிறந்த நாளை முன்னிட்டு, சுருட்டை முடியுடன், அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ள, அனுபமா பரமேஸ்வரனை ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். தென்னிந்திய அளவில் #HappyBirthdayAnupama ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ரசிகர், அனுபமாவுக்கு திருஷ்டி பட்டுட போகுது, சுத்திப் போடணும் என போட்டோ கமெண்ட் செய்துள்ளார்.