»   »  விஜய்யின் 64வது படம்... டைரக்டர் யார் தெரியுமா? #Vijay64

விஜய்யின் 64வது படம்... டைரக்டர் யார் தெரியுமா? #Vijay64

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜயுடன் இணையும் ஹரி #VIJAY64

விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரிந்துவிட்டது.

அவர்தான் ஆக்ஷன் மசாலா ஸ்பெஷலிஸ்ட் ஹரி.

Hari to direct Vijays 64th movie

விஜய்யை வைத்து ஹரி ஒரு படம் பண்ணா நல்லாருக்குமே என்று விஜய் ரசிகர்களே ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஹரியின் ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு. அந்தக் காட்சிகளில் விஜய் இன்னும் அசத்துவார் என்பதால் கிளம்பிய எதிர்ப்பார்ப்பு இது.

இப்போது அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது.

ஹரி தற்போது விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். சூர்யா படத்தை முடித்த பிறகு விஜய்யை இயக்கவிருப்பதாக ஹரியே தெரிவித்துள்ளார்.

விஜய் இப்போது முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது 63 வது படத்தை வினோத் இயக்குவார் என்று தெரிகிறது. 64வது படம் ஹரியுடன்தான் என்கிறார்கள்.

ஆக்ஷன் தெறிக்கட்டும்!

Read more about: hari vijay ஹரி விஜய்
English summary
Director Hari says that he would direct the 64th movie of Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X