»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் மரத்தைச் சுற்றி சுற்றி ஓடி டூயட் பாட ஆசையில்லை என்று நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கூறுகிறார்.

எனக்கு ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு ஆசை. அதனால் நான் சினிமா டைரக்ட் செய்வது குறித்து படிக்கலாம்னு இருக்கேன் என்கிறார்.

தற்போது இவர் பல மேடைகளில் தனது பரதநாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி அசத்திக் கொண்டிருக்கிறார்.

ஹரிகரனுக்கு இலங்கை விருது

மெய்சிலிர்க்க வைக்கும் குரலால் நம்மைக் கட்டிப் போட்டவர் பின்னணி இசைப் பாடகர் ஹரிகரன்.

இவருக்கு இலங்கையில் விருது வழங்கப்பட்டுள்ளது.

பல ஆல்பங்களை வெளியிட்டதன் மூலம் மட்டுமே இவர் இந்த விருதைத் தட்டிச் செல்லவில்லை. படங்களில் தன் கவர்ச்சிக் குரலால் பலரை தனக்குஅடிமையாக்கியவர் இவர்.

இனிய குரலுக்குச் சொந்தக்காரரான இவர் கொழும்பில் வழங்கப்படும் ஸ்வர்ணக்குரல் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவர் கொழும்பில் உள்ள சுகந்ததாசா இன்டோர் ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த இசைநிகழ்ச்சியைக் காண ஏராளமானரசிகர்கள் வந்திருந்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் ஹரிணி, மகாலட்சுமி மற்றும் சிவமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு இலங்கையில் உள்ள தமிழ் வானொலி நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்தியத் தூதர்கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டார்.

என்னாச்சு ரூ 1.30 கோடி?

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் டிரஸ்ட்க்குச் சொந்தமான ரூ 1.30 பணத்தை ஸ்வாகா செய்ததாக கூறப்படும் முன்னாள் நிர்வாகிகள் தற்போதுசர்ச்சைக்குரியவர்களாகி விட்டனர்.

விஷயம் இதுதான்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டிரஸ்ட் ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்காக வசூல் செய்யப்பட்ட பணத்தை டிரஸ்டுகள் தங்கள் சொந்தஉபயோகத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் உறுப்பினர்கள புகார்கூறியுள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான கே.பாலச்சந்தர் மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி ஆகியோர் சமீபத்தில்ராஜினாமா செய்தனர்.

இவர்கள்தான் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க டிரஸ்ட் பணத்தை தங்கள் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குற்றச்சாட்டு.

ஆனால் அவர்கள் இருவரும் கூறுகையில், கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கான நிதி, குஜராத் பூகம்ப நிவாரண நிதி மற்றும் தென்னிந்தியதிரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்காக கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகியவற்றிற்குத் தான் பணம் கொடுத்துள்ளோம் என்று ரசீதுகாட்டுகிறார்கள்.

Read more about: award, hariharan, music, playback, singer

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil