தி லெஜண்ட் மூலம் கம்பேக் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்.. மாஸ் பிஜிஎம், பாடல்கள் எல்லாம் பக்கா!
சென்னை: லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் பக்காவான கம்பேக் கொடுத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
படம் வெளியாவதற்கு முன்னதாக வெளியான மொசலு மொசலு பாடல், வாடிவாசல் வாடி பாடல்கள் மூலமே பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
லெஜண்ட் சரவணாவின் டைட்டில் கார்டு முதல் ஒவ்வொரு ஃபைட் சீன் என அனைத்து பிஜிஎம்களும் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் கம்பேக்
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கெளதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே திரைப்படம் மூலம் 2001ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த ஆண்டு வெளியான 12பி, மஜ்னு அதற்கு அடுத்த ஆண்டு வெளியான சாமி, கோவில், சாமுராய், லேசா லேசா அதனை தொடர்ந்து 2003ல் வெளியான காக்க காக்க என தொடர்ந்து மிகப்பெரிய ஹிட் ஆல்பங்களை கொடுத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

எல்லாமே ஹிட்
செல்லமே, உள்ளம் கேட்குமே, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, பீமா, தாம் தூம், வாரணம் ஆயிரம், அயன், எங்கேயும் காதல், கோ, ஏழாம் அறிவு, நண்பன், துப்பாக்கி, என்னை அறிந்தால், அநேகன், இருமுகன் என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

பாடல்கள் சூப்பர்
கெளதம் மேனன் மற்றும் மறைந்த இயக்குநர் கேவி ஆனந்த் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு அப்படியொரு ரசிகர்கள். தொடர்ந்து தங்களது படங்களில் பயன்படுத்தி வந்தனர். காப்பான் படத்திற்கு பிறகு 3 ஆண்டுகளாக எந்தவொரு படமும் வெளி வராத நிலையில், ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள தி லெஜண்ட் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஹாரிஸுக்காக போனோம்
ஒரு பக்கம் முதல் படத்தில் லெஜண்ட் சரவணன் எப்படி நடித்துள்ளார் என்பதை காண ரசிகர்கள் தியேட்டருக்கு சென்ற நிலையில், மறுபக்கம் ஹாரிஸ் ஜெயராஜுக்காக போனோம் என பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். லெஜண்டின் என்ட்ரி மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்துள்ள பிஜிஎம் வேறலெவல் என்கின்றனர்.

பெரிய படங்கள்
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் மற்றும் ஜூனியர் என்டிஆர் 30வது படம் என அடுத்தடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் கைவசம் 2 பெரிய படங்கள் உள்ளன. பழையபடி பிசியான இசையமைப்பாளராக தென்னிந்திய சினிமாவில் ஹாரிஷ் ஜெயராஜ் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











