»   »  திரிஷாவின் 'மோகினி'க்காக வரும் ஹாரிபாட்டர் கலைஞர்கள்

திரிஷாவின் 'மோகினி'க்காக வரும் ஹாரிபாட்டர் கலைஞர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரிஷா நடிக்கும் மோகினி படத்தில் ஹாரிபாட்டர் படத்தின் விஎப்எக்ஸ்(VFX) கலைஞர்கள் பணிபுரியவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரண்மனை 2, நாயகி படங்களைத் தொடர்ந்து திரிஷா தற்போது மோகினி என்ற புதிய பேய்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மதுர புகழ் மாதேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

லண்டன்

லண்டன்

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனிலும் 2 வது மற்றும் கடைசி கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்து, மெக்ஸிகோ நாடுகளிலும் நடைபெறவுள்ளது.மோகினி படம் முழுவதையும் வெளிநாட்டில் படம்பிடிக்க மாதேஷ் திட்டமிட்டிருக்கிறார்.

ஹாரிபாட்டர்

ஹாரிபாட்டர்

7 பாகங்களுடன் வெளியாகி உலகம் முழுவதும் வசூலைக் குவித்த படம் ஹாரிபாட்டர். மாயாஜால மந்திர தந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் விஷுவல் எப்பெக்ட்ஸ் முக்கியப் பணியாற்றியது. குறிப்பாக இப்படத்தின் வெற்றியில் முக்கிய இடம் விஷுவல் எப்பெக்ட்ஸ்க்கு உண்டு.

மோகினி

மோகினி

இந்நிலையில் மோகினி படத்தில் ஹாரிபாட்டர் படத்தின் கலைஞர்கள் இணைந்து பணியாற்றப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எப்பெக்ட்ஸ் பணிகள் அதிகமிருப்பதால் ஹாலிவுட் கலைஞர்களை ஒப்பந்தம் செய்திருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரிஷா

திரிஷா

மோகினி என்னும் பெயரில் இப்படத்தில் நடிக்கும் திரிஷா இதற்காக ஸ்பெஷல் மேக்கப் மற்றும் ஒப்பனைகளுடன் நடிக்கவிருக்கிறாராம். அரண்மனை 2 , நாயகி படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக திரிஷா இப்படத்தில் பேயாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Harry Potter VFX Team Join Hands with Trisha's Mohini Movie .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil