»   »  கமல் ஹாஸனுக்காக விட்டுக் கொடுத்தாரா விக்ரம்?

கமல் ஹாஸனுக்காக விட்டுக் கொடுத்தாரா விக்ரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
காமலுக்காக 2 கோடி ருபாய் கம்மி செய்த சீயான் விக்ரம்- வீடியோ

சென்னை: கமல் ஹாஸன் தயாரிக்கும் படத்தில் நடிக்க விக்ரம் தனது சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்துள்ளாராம்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார். படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.

Has Vikram done this for Kamal?

விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் கமலுடன் பணியாற்றிய ஜிப்ரான் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்பாத இந்த படத்தில் கமலை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் இயக்குனர்.

படம் குறித்த விபரங்கள் தெரியாத நிலையில் இது பிரெஞ்சு படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. துருவ நட்சத்திரம் படத்திற்கு ரூ. 17 கோடி வாங்கிய விக்ரம் கமல் தயாரிக்கும் படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

கமல் படத்தில் ரூ. 2 கோடி குறைவாகவே கேட்டுள்ளாராம் விக்ரம். தூங்காவனம் படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Vikram has reduced his salary to act in his upcoming movie being produced by Kamal Haasan and directed by Rajesh Selva. Akshara Haasan is also a part of this project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil