»   »  புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே: இசை இறைவனுக்கு #HBDRajasir

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே: இசை இறைவனுக்கு #HBDRajasir

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவிப்பதால் #HBDRajasir என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இசை இருக்கும் வரை இசைஞானி இளையராஜாவின் பெயரும் நிலைத்து நிற்கும். அத்தகையவர் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் #HBDRajasir என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இளையராஜாவை வாழ்த்தி வெளியிடப்பட்ட ட்வீட்களில் சில,

ஜீவன்

என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே...வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே...#HBDRajasir என வசந்த் என்பவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாலாட்டு

இசையால் தாலாட்டும்
தாய்மடி நீ.
உயிரில் விளக்கேற்றும்
உள்ளொளி நீ.
வாழ்க பல்லாண்டு!
#HBDRajasir என லலித்ஆனந்த் இளையராஜாவை வாழ்த்தியுள்ளார்.

ராஜராஜன்

"பாடல் கோடி கேட்டாலும்
பாதிக்கின்ற பாடல் நீ
ராஜராஜன் ராகம் நீ" #என்றென்றும்ராஜா #HBDRajasir என விக்னேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடவுள்

இசைக் கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... #Illayaraja #HBDRajasir என்று பிரசன்னா வெங்கட் இளையராஜாவை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார்.

புதுராகம்

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே.. ஆமாம் இசை இறைவன்..#HBDRajasir என்று அருண் அழகர்சாமி இசைஞானியை வாழ்த்தியுள்ளார்.

இளையராசா

இசை உலகில் என்றும் இளையராசா .....
உங்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
#HBDRajasir என ஜானகிராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
#HBDRajasir is trending on twitter the day Ilayaraja is celebrating his 72nd birthday. Lot of fans are wishing him via twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil