twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக், எக்கோவுக்கு நீதிமன்றம் தடை!

    By Shankar
    |

    சென்னை: இளையராஜாவின் பாடல்களை இனி அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்கள் வெளியிடவோ விற்பனை செய்யவோ கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களை எக்கோ நிறுவனம் உரிய காப்புரிமைத் தொகை தராமல் சில நிறுவனங்கள் விற்பனை செய்து வந்ததாக இளையராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    HC banned Agi Music and Echo to release Ilaiyaraaja albums

    இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இளையராஜா பாடல்களை வெளியிட்டு விற்பனை செய்து வந்த அகி மியூசிக், எக்கோ போன்ற நிறுவனங்கள் இனி இந்தப் பாடல்களை வெளியிட நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அந்த மனுவில்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், "இளையராஜாவின் பாடல்களை விற்கவோ, உற்பத்தி செய்யவோ, வேறு நபர்களுக்கு அனுப்பவோ தடை செய்யப்பட்டுள்ளது.

    மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும்," என அகி மியூசிக்கின் அகிலன் லட்சுமணன், எக்கோ நிறுவனத்தின் நரசிம்மன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    English summary
    The Madras High Court has banned Agi Music and Echo Recording Company to release Ilaiyarajaa's albums.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X