»   »  'ஹலோ நான் பேய் பேசுறேன்'.. தமிழ் சினிமாவை மீண்டும் பேய் பிடித்தது!

'ஹலோ நான் பேய் பேசுறேன்'.. தமிழ் சினிமாவை மீண்டும் பேய் பிடித்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் மீண்டும் பேய் சீசன் தொடங்கியுள்ளது. நாளை 2 பேய்ப் படங்கள் வெளியாகின்றன.

செண்டிமெண்டை நம்பி வெளியான பிச்சைக்காரன், தோழா படங்கள் நல்ல வசூலைக் குவித்ததில், படைப்பாளிகள் தங்கள் வசமிருந்த செண்டிமெண்ட் கதைகளை எடுத்து தூசு தட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் நாளை ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2 என 2 பேய்ப்படங்கள் வெளியாகின்றன. இதனால் தமிழ் சினிமா மீண்டும் பேய்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.

டார்லிங்

டார்லிங்

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஐ, ஆம்பள போன்ற பெரிய படங்களுடன், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருந்த டார்லிங் படம் வெளியானது. பெரிய படங்களுடன் வெளியான டார்லிங், வசூலில் விநியோகஸ்தர்களின் டார்லிங்காக மாறியது. இந்தப் படத்தின் வெற்றியால் அதுவரை வெவ்வேறு பாதைகளில் பயணித்து வந்த தமிழ் சினிமா பேய் என்ற ஒரே பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

சூர்யா தொடங்கி

சூர்யா தொடங்கி

மேலும் காலம்காலமாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த பெண் பேய்களுக்கு விடுதலை கொடுத்து டிமாண்டி காலனி, கமர்கட்டு, டார்லிங் என்று ஆண் நடிகர்கள் பேய்களாக மாறினர். இந்தப் பேய்களின் மோகம் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவையும் மாஸ் படத்தில் பேயாக மாற்றியது. ஆண் நடிகர்களை பேயாக மாற்றிய புண்ணியத்தில் பெரும்பங்கு ராகவா லாரன்ஸுக்கு உள்ளது. முனி, காஞ்சனா, காஞ்சனா 2 என்று வரிசையாக பேய்களை வைத்து லாரன்ஸ் ஹிட் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

விதம் விதமான பேய்கள்

விதம் விதமான பேய்கள்

ஆண் பேய்கள், அழகான பேய் என்று விதவிதமான பேய்களைப் பார்த்து வரவர ரசிகர்களுக்குப் பேய்கள் மீது இருந்த பயமே போய்விட்டது. முக்கியமாக பேய்களை ஸாரி பேய்ப்படங்களை பார்த்து இப்போது யாரும் பயப்படுவதில்லை. சொல்லப் போனால் பேய்ப்படங்களில் தான் காமெடி தூக்கலாக இருக்கிறதாம்.

நயன்தாரா, திரிஷா

நயன்தாரா, திரிஷா

இதில் உச்சகட்டமாக அழகான நாயகிகளை பேய்களாகக் காட்டி ரசிகர்களை பேய்கள் மீதும் காதல் கொள்ள வைத்து விட்டனர் கோலிவுட் படைப்பாளிகள். மாயா, அரண்மனை 2 படங்களில் நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா என்று முன்னணி நடிகைகளே பேயாக மாறியதில் வசூல் கொட்டோகொட்டென்று கொட்டியது.

குறைந்த பேய்கள்

குறைந்த பேய்கள்

இந்த ஆண்டில் பேய்கள் ஜாக்கிரதை, கரையோரம், அரண்மனை 2, சவுகார்பேட்டை போன்ற 4 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதில் அரண்மனை 2 நன்றாக ஓட, மற்ற படங்கள் தியேட்டரை விட்டே ஓடின.

தோழா, பிச்சைக்காரன்

தோழா, பிச்சைக்காரன்

கார்த்தி நடிப்பில் வெளியான தோழா மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் தமிழ் சினிமாவின் கவனம் தற்போது செண்டிமெண்ட் பாக்கம் திரும்பியுள்ளது.

டார்லிங் 2

டார்லிங் 2

இந்த நேரத்தில் டார்லிங் 2 மற்றும் சுந்தர்.சியின் தயாரிப்பில் ஹலோ நான் பேய் பேசுறேன் என 2 பேய்ப்படங்கள் நாளை வெளியாகின்றன. டார்லிங் படத்தின் 2 வது பாகம் என்பதால் டார்லிங் 2 விற்கும், சுந்தர்.சியின் தயாரிப்பு என்பதால் ஹலோ நான் பேய் பேசுறேன் படத்திற்கும் ஒருவித எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்த 2 படங்களில் ஏதேனும் ஒரு வெற்றியடைந்தால் கூட தமிழ் சினிமா மீண்டும் பேய்களின் பிடியில் சிக்கும் அபாயம் இருக்கிறது.

English summary
Hello Naan Pei Pesuren, Darling 2 Both Horror Movies Released Tomorrow. Horror Movies now Back to Tamil Cinema? Let's See!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil