»   »  ‘ஹலோ... நான் பேய் பேசுறேன்’... சேலை கட்டிய பேய் பழசு.. அடுத்து வருது டெக்னாலஜி பேய்!

‘ஹலோ... நான் பேய் பேசுறேன்’... சேலை கட்டிய பேய் பழசு.. அடுத்து வருது டெக்னாலஜி பேய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷ்பு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் படத்திற்கு, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்' எனப் பெயர் வைக்கப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க உள்ளார். வைபவிற்கு ஜோடியாக ஓவியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

இவர்களுடன் ‘விடிவி' கணேஷ், கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஹலோ நான் பேய் பேசுறேன்...

ஹலோ நான் பேய் பேசுறேன்...

இப்படத்தின் தலைப்பு இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. இந்நிலையில், இப்படத்திற்கு, ‘ஹலோ... நான் பேய் பேசுறேன்' என வித்தியாசமான தலைப்பை வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

செல்போன் பேய்...

செல்போன் பேய்...

மேலும், கீழே கிடக்கும் செல்போன் ஒன்றை எடுக்கும் ஹீரோவுக்கு அதன் மூலம் பேய் பிடிக்க, அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாவே இப்படத்தின் கதைக்களமாம். எனவே, இந்தத் தலைப்பே பொருத்தமாக இருக்கும் என படக்குழு நினைக்கிறதாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

விரைவில் இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தமிழில் பேய்ப்படங்கள் ஹிட்டடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2 படங்கள்...

மேலும் 2 படங்கள்...

வைபவ் இப்படம் தவிர ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கும் புதிய படத்திலும், விஷன் ஐ மீடியாஸ் தயாரிக்கும் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The sources says that for Vaibhav produced by Kushboo is to be named 'Hello, nan pei pesurean'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil