தனுஷின் மாறன்...வெளியான அட்டகாசமான ரிலீஸ் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்
சென்னை : தனுஷ் தற்போது நடித்து வரும் மாறன் படம் வெளியாகும் தேதி பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இதனால் இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன். ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் பேனரில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரானாவால் தள்ளிபோன ஷுட்டிங்
2020ம் ஆண்டு மே மாதமே மாறன் படத்தின் ஷுட்டிங்கை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக படம், ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையுடனேயே நின்றது. இருந்தாலும் லாக்டவுன் சமயத்திலேயே டைரக்டர் கார்த்திக் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை செய்து வந்துள்ளார். லாக்டவுன் முடிந்ததுமே படத்திற்கு மாறன் என டைட்டில் வைத்திருப்பதாக போஸ்டருடன் அறிவித்தனர்.

பத்திரிக்கையாளராக தனுஷ்
இந்த படத்தில் தனுஷ் முதல் முறையாக பத்திரிக்கையாளர் ரோலில் நடித்துள்ளார். இவரது தங்கையாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் சமுத்திரக்கனி. ஆனால் இந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருக்கிறாராம். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

கன்ஃபார்ம் ஆன ஓடிடி ரிலீஸ்
மாறன் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படாது. மாறாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். ஆனால் எந்த தேதியில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மாறன் படத்தின் ரிலீஸ் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தேதியில் ரிலீசா
மாறன் படம் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 25 ம் தேதி மாறன் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆனால் அது முடியாமல் போனால் மார்ச் 4 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம். இதனால் தனுஷ் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











