twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2022ல் கலக்கிய 10 கோலிவுட் ஹீரோக்கள்.. ஸ்டார் டொமைன் பத்திரிகை தேர்வு!

    |

    சென்னை : 2022ம் ஆண்டு தன்னுடைய இறுதி மாதத்தில் நடைபோட்டு வருகிறது. இந்த ஆண்டில் பல விநோதங்களை தமிழ் சினிமா சந்தித்துள்ளது.

    மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான முன்னணி ஹீரோக்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. ஆனாலும் வசூலில் சொதப்பவில்லை.

    ஆனால் சாதாரணமாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி வெளியான லவ் டுடே போன்ற சில படங்கள் வசூலில் கலக்கியது.

    ஏஆர் ரஹ்மான் பங்கேற்ற மெக்சிக்கோ சினிமா விருந்து… கோவா திரைப்பட விழாவில் நடந்த சுவாரஸ்யம் ஏஆர் ரஹ்மான் பங்கேற்ற மெக்சிக்கோ சினிமா விருந்து… கோவா திரைப்பட விழாவில் நடந்த சுவாரஸ்யம்

    ஆண்டின் கடைசி மாதத்தில் 2022

    ஆண்டின் கடைசி மாதத்தில் 2022

    தமிழில் வெளியான பராசக்தி படத்தில் நீதிமன்றத்தில் சிவாஜி பேசிய பிரபல வசனம் ஒன்று உண்டு. பல விசித்திரமான வழக்குகளை இந்த நீதிமன்றம் சந்தித்துள்ளது என்பது தான் அது. அந்த வகையில் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கும் 2022ம் ஆண்டு பல விசித்திரங்களை சந்தித்துள்ளது. தொடர்ந்து இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மேலும் பல விசித்திரங்களை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    சிறப்பாக செயல்பட்ட திரையரங்குகள்

    சிறப்பாக செயல்பட்ட திரையரங்குகள்

    அந்த வகையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ரஜினிகாந்தின் அண்ணாத்த, பிப்ரவரியில் வெளியான அஜித்தின் வலிமை, தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் போன்ற படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் திரையரங்குகளில் வெளியாகின. கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட்டு, இந்த ஆண்டு திரையரங்குகள் மூச்சுவிட்டுக் கொள்ள வசதியாக திரையரங்குகள் சிறப்பாக செயல்பட்டன.

    கலவையான விமர்சனங்களை பெற்ற படங்கள்

    கலவையான விமர்சனங்களை பெற்ற படங்கள்

    ஆனால் அண்ணாத்த, வலிமை மற்றும் பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. ஆனாலும் வசூலில் இந்தப் படங்கள் ஓரளவுக்கு கைக்கொடுத்தன. ஆனால் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே போன்ற படங்கள் அதிகமான எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் மழை பொழிந்துள்ளன. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

    ரசிகர்களை ஈர்த்த படங்கள்

    ரசிகர்களை ஈர்த்த படங்கள்

    கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா போன்றவர்களின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பதும் நினைத்து பார்க்காமல் நிகழ்ந்த நிகழ்வுதான்.

    2022ம் ஆண்டின் சிறப்பான ஹீரோ சிவகார்த்திகேயன்

    2022ம் ஆண்டின் சிறப்பான ஹீரோ சிவகார்த்திகேயன்

    இந்த ஆண்டில் மிகச்சிறந்த ஹீரோக்களாக ஸ்டார் டொமைன் 10 ஹீரோக்களை பட்டியலிட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி பெற்றுள்ளார். அவரது டாக்டர், டான் படங்கள் தொடர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆயினும் டான் படம் அவருக்கு மிகப்பெரிதாக கைக்கொடுத்துள்ளது.

    இரண்டாவது இடத்தில் கமல்ஹாசன்

    இரண்டாவது இடத்தில் கமல்ஹாசன்

    இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நடிகர் கமல்ஹாசன் காணப்படுகிறார். இவரது விக்ரம் படம் சிறப்பான வெற்றியை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பிலும் இவர் ஈடுபட்டுள்ளார். சின்னத்திரையிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    மூன்றாவது இடத்தில் அஜித்

    மூன்றாவது இடத்தில் அஜித்

    இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நடிகர் அஜித் காணப்படுகிறார். இவரது வலிமை படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. இந்தப் படத்தில் அதிகமான பைக் ரேசிங் காட்சிகள் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றதாக விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் இந்தப் படம் இந்த ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் எப்போதுமே ரசிகர்களை கவர்வதில் அஜித் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    4வது இடத்தில் விஜய்

    4வது இடத்தில் விஜய்

    ஸ்டார் டொமைனின் இந்த பெஸ்ட் ஹீரோக்கள் பட்டியலில் விஜய்க்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அவரது பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படமும் வசூலிக்க தவறவில்லை என்றபோதிலும் அதிகமான மீம்ஸ்களையும் விமர்சனங்களையும் இந்தப்படம் பெற்றது. படத்தின் இயக்குநர் நெல்சன் மிகவும் அதிகமான விமர்சனங்களை பெற்றார்.

    அடுத்தடுத்த இடங்களில் சிம்பு, விக்ரம்

    அடுத்தடுத்த இடங்களில் சிம்பு, விக்ரம்

    5வது இடத்தை நடிகர் சிம்பு பெற்றுள்ளார். இவரது மாநாடு படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு படமும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் விக்ரம் 6வது இடத்தை பிடித்துள்ளார். அவரது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

    7வது 8வது இடங்களில் சூர்யா -கார்த்தி

    7வது 8வது இடங்களில் சூர்யா -கார்த்தி

    இதனிடையே 7வது இடத்தில் நடிகர் சூர்யா இடம்பெற்றுள்ளார். விக்ரம் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டர் இவரை ரசிகர்களிடம் வேறு லெவலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவரது அடுத்தடுத்த வெற்றிகளும் இவரது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து 8வது இடத்தில் நடிகர் கார்த்தி இடம்பெற்றுள்ளார். இவரது விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களின் வெற்றி இவரை கோலிவுட்டின் சிறப்பான நாயகனாக மாற்றியுள்ளது.

    அடுத்த இடங்களில் தனுஷ் -பிரதீப் ரங்கநாதன்

    அடுத்த இடங்களில் தனுஷ் -பிரதீப் ரங்கநாதன்

    கார்த்தியை தொடர்ந்து 9வது இடத்தில் நடிகர் தனுஷ் இடம்பெற்றுள்ளார். இவரது திருச்சிற்றம்பலம் மற்றம் நானே வருவேன் படங்களின் வெற்றி இவருக்கு இந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே 10வது இடத்தில் பச்சக் என்று வந்து பொருந்தியுள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவரது சமீபத்திய லவ் டுடே படத்தின் வெற்றி இவரை கோலிவுட்டின் முதல் 10 ஹீரோக்களின் வரிசையில் இடம்பெற செய்துள்ளது.

    10 இடங்களில் இடம்பெறாத ரஜினி

    10 இடங்களில் இடம்பெறாத ரஜினி

    இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில நடிகர்கள் இடம்பெறாமல் உள்ளனர். அவர்களது படங்கள் எதிர்பார்த்த வெற்றியையும் வரவேற்பையும் பெறாததுதான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு நிறைவுறவுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் அஜித், விஜய், ரஜினி உள்ளிட்டவர்களின் படங்கள் வெளியாகவுள்ளன. இந்தப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    English summary
    Kollywood's most popular heroes 2022 list presented by star domain magazine
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X