அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் பாலா... வெறியேற்றும் சூர்யா 41 அசத்தல் அப்டேட்

சென்னை : சூர்யா - பாலா இணைந்துள்ள சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. இதனால் படம் நிச்சயம் வேற லெவலில், வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா - டைரக்டர் பாலா மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு சூர்யா 41 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் முக்கிய ரோலில் கிருத்தி ஷெட்டி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 41 கதை இது தானா

சூர்யா 41 கதை இது தானா

சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் கன்னியாகுமரியில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் சூர்யா, வாய் பேச முடியாத, காது கேட்காத மீனவர் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. மீனவ கிராமத்தை மையமாகக் கொண்ட கதையாக சூர்யா 41 படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா 41 படத்திற்காக கன்னியாகுமரியில் 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாம். இந்த வீடுகளில் தான் தற்போது ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

சூர்யா எடுத்த சூப்பர் முடிவு

சூர்யா எடுத்த சூப்பர் முடிவு

ஷுட்டிங் முடிந்ததும் இந்த வீடுகளை மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கே கொடுத்து விட சூர்யா முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. சூர்யா, கீர்த்தி ஷெட்டி தவிர வேறு யாரெல்லாம் படத்தில் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் படத்தின் ஷுட்டிங் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

நடுக்கடலில் ஷுட்டிங்கா

நடுக்கடலில் ஷுட்டிங்கா

லேட்டஸ்ட் தகவலின் படி, சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் தற்போது கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில், நடுக்கடலில் நடத்தப்பட்டு வருகிறதாம். தற்போது நடைபெற்று வரும் ஷுட்டிங்கில் வெளிநாட்டினர் சிலரும் நடித்து வருகிறார்களாம். இது வழக்கமான பாலா படத்தை போல் இல்லாமல், முழுக்க முழுக்க வித்தியாசமான கதை, வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பாலாவின் வேற லெவல் பிளான்

பாலாவின் வேற லெவல் பிளான்

சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி உள்ளதால், சூர்யா 41 படத்தின் ஷுட்டிங்கை ஜுன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சூர்யா, பாலாவிடம் கூறி இருந்தாராம். ஆனால் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங்கை மே மாத இறுதிக்குள் முடிக்க பாலா திட்டமிட்டுள்ளாராம். ஆயுத பூஜை விடுமுறை சமயத்தில் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X