தளபதி 66 முதல் கட்ட ஷுட்டிங் பற்றி வெளியான அசத்தல் தகவல்...உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை : விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கில் என்ன காட்சிகள் எடுக்கப்பட்டது என்பது பற்றிய அசத்தலான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை கேட்டு ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர்.
தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கான தமிழ் திரைக்கதை மற்றும் பாடல்கள், வசனங்களை கவிஞர் விவேகா எழுதி வருகிறார்.

யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு சொல்லுங்க
தளபதி 66 படத்தில் விஜய்யுடன், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகிபாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், வில்லன் ரோலில் நடிக்கவில்லை. மற்றொரு முக்கியமான ரோலில் நடிப்பதாக கூறி விட்டார்கள். இது குடும்ப, ஆக்ஷன், எமோஷனல் படம் என கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட ஷுட்டிங்
தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங், சென்னையில் மிக சில நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் ராஷ்மிகா, சரத்குமார், ஷாம், யோகிபாபு இதுவரை இணைந்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த செட்டில் தான் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தான் ஷுட்டிங் பிளான்
முதல் கட்ட ஷுட்டிங்கை சென்னையில் முடித்தவர்கள், இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்துகிறார்கள். இம்மாத இறுதி வரை இங்கு ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கு பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்பி அங்கு அமைக்கப்பட உள்ள செட்டில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை தளபதி 66 பட ஷுட்டிங் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

சென்னையில் அப்படி என்ன எடுத்தாங்க
தற்போது ரசிகர்களின் கேள்வி என்னவென்றால், படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் தான் பங்கேற்கிறார்கள் என்றால், முதல் கட்ட ஷுட்டிங்கில் யாரை வைத்து, என்ன காட்சிகளை, அதுவும் இவ்வளவு குறுகிய நாட்களில் எப்படி எடுத்து முடித்துள்ளார்கள் என்பது தான். சென்னையில் அப்படி என்ன சீனை எடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இது பற்றிய தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது.

அட சூப்பர் தகவலா இருக்கே
அதாவது, முதல் கட்ட ஷுட்டிங்கில் பாடல் காட்சிகள் தான் எடுக்கப்பட்டதாம். விஜய்யை மட்டும் வைத்து இந்த பாடல் காட்சிகளை எடுத்தார்களாம். இதனால் இது விஜய்யின் இன்ட்ரோ பாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம். சென்னையில் மூன்றாம் கட்டமாக எடுக்கப்பட உள்ள பாடல் சென்டிமென்ட் பாடலா அல்லது டூயட் பாடலா என்பதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











