twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யோகி பாபு முதல் காளி வெங்கட் வரை.. 2019ல் ரசிகர்களை சிரிக்க வைத்த டாப் 10 காமெடியன்கள் லிஸ்ட் இதோ!

    |

    சென்னை: இந்த ஆண்டு பல திரைப்படங்களில் நடித்து காமெடியில் கலக்கி வருகிறார் யோகி பாபு. ஆரம்பத்தில் இவரது காமெடிகள் குறித்து விமர்சனம் செய்த பலர், இன்று இவரது கால்ஷீட் இல்லாமல் படத்தை வெற்றிபடமாக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

    யோகி பாபுவை தாண்டி, மற்ற காமெடியன்களும் இந்த ஆண்டு காமெடியில் கலக்கி உள்ளனர்.

    2019ம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் சிரிக்க வைத்த காமெடி நடிகர்களின் பட்டியலில் எந்த நடிகர் எந்த இடத்தை பிடித்துள்ளார் என்பதை இங்கே காண்போம்.

    இந்த நேரத்துல இப்படி உள்ளாடை விளம்பரம் தேவையா.. திஷா படானியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!இந்த நேரத்துல இப்படி உள்ளாடை விளம்பரம் தேவையா.. திஷா படானியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

    10. காளி வெங்கட்

    10. காளி வெங்கட்

    இந்த ஆண்டு வெளியான கழுகு 2 மற்றும் பெட்ரோமாக்ஸ் என இரு படங்களில் காமெடி நடிகர் காளி வெங்கட் தனது சிறப்பான நகைச்சுவைத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். இந்த ஆண்டு பெரிய அளவில் காளி வெங்கட்டுக்கு படம் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    9. ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்

    9. ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக் ஷீப் டீம் இயக்கத்தில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நாயகன் ரியோவுடன் காமெடியில் கலக்கிய ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், இன்னும் பல படங்களில் காமெடியனாக அசத்துவார் என தெரிகிறது.

    8. ஆனந்த்ராஜ்

    8. ஆனந்த்ராஜ்

    ஜாக்பாட் படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு என பலரும் ஸ்கோர் செய்து வந்த நிலையில், சத்தமின்றி பெண் வேடத்தில் நடித்து காமெடியில் சிக்ஸர் அடித்தவர் ஆனந்த்ராஜ் தான். பாட்ஷா, சூர்யவம்சம் என பல படங்களில் வில்லனாக மிரட்டி வந்த ஆனந்த் ராஜ், பிகில் படத்தில் விஜய்யுடன் அரை டவுசர் போட்டு பிரியாணிக்கு ரைத்தா வைக்கல என செய்யும் அட்டகாசங்கள் அவரை காமெடி நடிகர் பட்டியலில் சேர்த்துள்ளது.

    7. சாரா

    7. சாரா

    கோமாளி படத்தில் டாக்டராக நடித்து அசத்திய யூடியூப் பிரபலம் சாரா இந்த ஆண்டு டாப் 10 காமெடியன்கள் பட்டியலில் இணைந்துள்ளார். சூப்பர் டூப்பர், நட்பே துணை என மூன்று படங்களில் நடித்துள்ள சாரா அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ஓ மை கடவுளே படத்திலும் காமெடியில் கலக்க உள்ளார்.

    6. சதீஷ்

    6. சதீஷ்

    சமீபத்தில் புது மாப்பிள்ளையாகியுள்ள காமெடி நடிகர் சதீஷ், இந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், பூமராங், சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார். சீக்கிரம் ஹீரோவாக முயற்சி செய்து வரும் சதீஷின் முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    5. கோவை சரளா

    5. கோவை சரளா

    மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த ஆண்டு வெளியான காஞ்சனா 3 படம் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. ஆனால், காஞ்சனா வரிசை படங்களில் தனது காமெடியால் சிரிக்க வைத்து வந்த கோவை சரளா இந்த படத்திலும் ரசிகர்களை சிரிக்க வைக்க தவற வில்லை.

    4. முனிஷ்காந்த்

    4. முனிஷ்காந்த்

    கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் படத்தில் அப்படியொரு குணசித்திர நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் முனிஷ்காந்த், இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியான பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தில் பயம் இருந்தும் வெளியே காட்டாத நபராக பக்காவாக நடித்து பலரையும் சிரிக்க வைத்துள்ளார். ரஜினியின் பேட்ட படத்திலும் முனிஷ்காந்த் நடிக்கும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    3. மொட்டை ராஜேந்திரன்

    3. மொட்டை ராஜேந்திரன்

    தில்லுக்கு துட்டு 2 படத்தில் சந்தானத்துக்கு ஈடு கொடுத்து பல இடங்களில் காமெடியில் கலக்கிய மொட்டை ராஜேந்திரன் இந்த ஆண்டு டாப் 10 காமெடியன்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், நட்புன்னா என்னான்னு தெரியுமா, தர்மபிரபு, கொரில்லா, ஏ1, ஜாக்பாட், பப்பி மற்றும் நயன்தாரா நடித்த மலையாள படமான லவ் ஆக்‌ஷன் டிராமா என இந்த வருஷம் எக்கச்சக்க படங்களில் நடித்து வசூல் செய்துள்ளார்.

    2. சூரி

    2. சூரி

    சந்தானத்திற்கு பிறகு காமெடியில் நம்பர் ஒன் இடத்தில் கலக்கி வந்த நடிகர் சூரி, இந்த ஆண்டு பல படங்களில் நடிக்கவில்லை. சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா, சங்கத்தமிழன், தேவராட்டம், வெண்ணிலா கபடி குழு 2, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள தலைவர் 168 படத்தில் சூரி காமெடியில் கலக்க உள்ளார்.

    1. யோகி பாபு

    1. யோகி பாபு

    இந்த பட்டியலில் இந்த ஆண்டு முதலிடத்திற்கு இவரைத் தவிற வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். காமெடி படம் மட்டும் இல்லை, புதிதாக படம் எடுக்கப் போகிறோம் என்றாலே யோகி பாபு கால்ஷீட் வாங்கியாச்சா என கேட்கும் அளவுக்கு பிஸி ஆகியுள்ளார். பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் தொடங்கி தீபாவளிக்கு ரிலீசான பிகில் வரை கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியுள்ளார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் யோகி பாபு பெயரை சேர்க்க ஃபோர்ப்ஸ் மறந்து விட்டது. அந்த அளவுக்கு வசூலில் இந்த ஆண்டு கல்லா கட்டியுள்ளார் யோகி பாபு.

    ஸ்பெஷல் மென்ஷன்

    ஸ்பெஷல் மென்ஷன்

    காமெடியனாக இருந்து ஹீரோவாக அப்கிரேட் ஆகியுள்ள சந்தானம் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இந்த ஆண்டும் தங்களது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரைப்படம் அவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைக் கொடுத்தது.

    சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 மற்றும் ஏ1 படங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.

    இவர்களை தாண்டி வில்லன் நடிகரான எஸ்.ஜே. சூர்யா எலி தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் நபராக மான்ஸ்டர் படத்தில் செய்த காமெடியும் இந்த ஆண்டின் சிறந்த காமெடி என்பதை யாராலும் மறக்கமுடியாது.

    English summary
    Tamil Cinema is always known for best comedy movies. This year also many more comedy movies entertain Tamil Audience. From Yogi Babu to Kaali Venkat who spot the top place in this year list out now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X