twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப் 10: 2019ல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி படங்கள் லிஸ்ட் இதோ!

    |

    சென்னை: 2019ம் ஆண்டின் டாப் 10 காமெடி படங்கள் லிஸ்ட் என இதை சொல்வதை விட டாப் 10 யோகி பாபு பட லிஸ்ட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் யோகி பாபுவின் ஆதிக்கம் அதிகம்.

    யோகி பாபுவை தாண்டி சந்தானந்தின் படங்களும் இந்த ஆண்டு வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

    சூரி, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்தர், விவேக் என பல காமெடி நடிகர்களும் இந்த ஆண்டு கலக்கி உள்ளனர்.

    2019ம் ஆண்டில் சிறந்த பத்து இடங்களை பிடித்த காமெடி படங்கள் என்ன என்ன என்பதை பார்ப்போம்.

     சாணியடித்ததாக சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ போட்டு ஐஸ்! சாணியடித்ததாக சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ போட்டு ஐஸ்!

    10.ஜாம்பி

    காமெடி படங்கள் பட்டியலில் பேய் காமெடி படங்களையும் தவிர்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் வெளியான பேய் படங்களை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, நிஜ பேயே நேரில் வந்தாலும், மேக்கப் சரியில்லை என கலாய்க்கும் மனோபாவத்தை காமெடி பேய் படங்கள் கொடுத்துள்ளன. இயக்குநர் புவன் ஆர். நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், யூடியூப் பிரபலங்கள் பரிதாபங்கள் கோபி, சுதாகர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜாம்பி படம் இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது.

    9.ஜாக்பாட்

    சூர்யா தயாரிப்பில் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு நடிப்பில் வெளியான ஜாக்பாட் படம் மரகத நாணயம் படத்தை போல புதையலை தேடி ஓடும் கதையாக காமெடியுடன் கச்சிதமாக அமைந்திருந்தது. திருமணத்திற்கு பிறகு மீண்டும் கம்பேக் ஆன ஜோதிகா சாதுவான ரோலில் நடித்து வந்த நிலையில், சரவெடி ஜோதிகாவாக ஆக்‌ஷன், காமெடி என இந்த படத்தில் கலக்கியிருந்தார். வில்லனாக மிரட்டியிருந்த ஆனந்த்ராஜை பெண் போலீசாக நடிக்க வைத்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் இயக்குநர்.

    8.தர்மபிரபு

    முத்துக்குமரன் இயக்கத்தில் எமதர்ம ராஜாவாக யோகி பாபு முதன்முறையாக கதையின் நாயகனாக தர்மபிரபு படத்தில் நடித்திருந்தார். லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஃபேண்டஸி படமாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் காமெடி வசனங்கள் தர்மபிரபு படத்தை வெற்றி படமாக இந்த ஆண்டு மாற்றியது.

    7.மிஸ்டர் லோக்கல்

    சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பல காமெடி படங்களை கொடுத்த ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றதும், ரசிகர்களுக்கு செம்ம காமெடி ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வேலைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர் என பலர் நடித்திருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸ் இந்த படம் வெற்றி பெறவில்லை ஆனால், இந்த படத்தின் காமெடி இன்றும் நகைச்சுவை சேனல்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    6.காஞ்சனா 3

    காஞ்சனா 2 படம் 100 கோடி வசூலை பெற்று பாக்ஸ் ஆஃபிஸிலும் ரசிகர்களின் ஃபேவரைட் பட லிஸ்டிலும் முதலிடம் பிடித்திருந்தது. காஞ்சனா 3 படத்திற்கும் அதே அளவான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், குழந்தைகளோடு சென்று பார்க்க முடியாத அளவுக்கு மூன்று நாயகிகளை அரைகுறை ஆடையுடன் நடிக்க வைத்து கவர்ச்சி நெடியை அதிகம் தூவியதால், காஞ்சனா ஒன்று மற்றும் இரண்டு அளவுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை.

    5.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

    யூடியூபில் கலக்கிய பிளாக்‌ஷிப் டீமில் இருந்து சிவகார்த்திகேயன் பேனரில் கார்த்திக் வேணுகோபால் இயக்கிய படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. ரியோ இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ராம் நிஷாந்த், பிஜிலி ரமேஷ், நாஞ்சில் சம்பத் என காமெடியில் இந்த படம் பட்டையை கிளப்பியது.

    4.தில்லுக்கு துட்டு 2

    நட்சத்திர காமெடியனாக இருந்த சந்தானம் ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், மற்ற படங்களை விட அவருக்கு தில்லுக்கு துட்டு சீரிஸ் நல்ல ஹிட் கொடுத்து வருகிறது. முதல் பாகத்தை விட இந்த ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூலையும் வாரிக் கொடுத்துள்ளது. ராம் பாலா இயக்கத்தில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படத்தில் மொட்டை ராஜேந்தர், ஊர்வசி, ஆனந்த்ராஜ் என பலரும் காமெடியில் கலக்கியிருந்தனர்.

    3.எல்.கே.ஜி

    பேய் காமெடி படங்களை தாண்டி அரசியலிலும் காமெடி படம் பண்ணலாம் என இந்த ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வரிசையாக படங்களை தயாரிக்கத் தொடங்கி மாபெரும் வசூல் வேட்டையை இந்த ஆண்டு செய்தது.

    2.மான்ஸ்டர்

    ஒரு ஈயை வைத்து ராஜமெளலி நான் ஈ படத்தை எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது போல, ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ஒரு எலியை வைத்து இந்த ஆண்டு இப்படியொரு சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துள்ளார். ஸ்பைடர், மெர்சல் படங்களில் வில்லனாக மிரட்டிய எஸ்.ஜே.சூர்யாவை சிறு புழுவுக்கும் துரோகம் நினைக்காத வள்ளலார் பக்தராக மாற்றியது மட்டுமின்றி, எஸ்.ஜே.சூர்யாவின் முழு நடிப்புத் திறமையையும் ஒரே படத்தில் கொண்டு வந்துள்ளார்.

    1.கோமாளி

    இந்த ஆண்டு சிறந்த படம், அதிக நாட்கள் ஓடிய படம், கமர்ஷியல் படம், காமெடி படம் என எந்த பட்டியலில் வேண்டுமானாலும், ஜெயம் ரவியின் கோமாளி படத்தை சேர்க்கலாம். அந்த அளவுக்கு ஜனரஞ்சகமான படம். அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்திலும் யோகி பாபுவின் காமெடி அல்டிமேட். மேலும், ஷாராவின் காமெடி காட்சிகளும் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது. நிச்சயம் கோமாளி படம் இந்த இடத்திற்கு தகுதியானது தான்.

    English summary
    Year end comes, here is the list of 2019 top 10 tamil comedy movies From Comali to Zombie spotted on the list. Yogi Babu present in many of the movies in the list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X