செம ஹாட் அப்டேட்... விக்ரமில் இணையும் அடுத்த 2 வில்லன்கள் இவர்கள் தான்

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மல்டி ஸ்டார்கள் நடிக்கும் மிகப் பெரிய பான் இந்தியன் படமாக இந்த படம் கருதப்படுகிறது.

இந்த படத்தின் நான்காம் பட்ட ஷுட்டிங் நேற்று கோவையில் துவங்கி உள்ளது. தொடர்ந்து ஒரு மாதங்கள் இந்த ஷுட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதோடு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாம்.

 மூன்று ஸ்டார்கள் இணையும் சீன்

மூன்று ஸ்டார்கள் இணையும் சீன்

இந்த நான்காம் கட்ட ஷுட்டிங்கில் பெரும்பாலான முக்கிய காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம். இதில் பல காட்சிகளில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத்ஃபாசில் ஆகியோர் இணைந்து ஒரே காட்சியில் நடிக்க போகிறார்களாம். இதனால் இவர்கள் நடிப்பை பார்க்க படக்குழுவினர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

கமலுக்கு 7 வில்லன்கள்

கமலுக்கு 7 வில்லன்கள்

விக்ரம் படத்தில் வயதான போலீஸ் கேரக்டரில் நடிக்கும் கமலுக்கு வில்லனாக 7 பேர் நடிக்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டது. கதைப்படி மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு 6 சகோதரர்களாம். அவர்களில் மூத்த சகோதரராக சம்பத் ராமும், இளைய சகோதரராக செம்பன் வினோத் ஜோஷும் நடிப்பதாக கூறப்பட்டது.

இவர்கள் தான் 2 தம்பிகள்

இவர்கள் தான் 2 தம்பிகள்

தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி விஜய் சேதுபதியின் மற்றொரு தம்பியாகவும், வில்லன்களில் ஒருவராகவும் பிரபல மிமிக்ரி நடிகர் கோகுல் நடிக்க போகிறாராம். கலக்க போவது யாரு பிரபலமான இவர், அம்புலி படத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு தம்பியாக பிரபல நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் நடிக்கிறாராம்.

அப்போ இவங்க கேரக்டர்

அப்போ இவங்க கேரக்டர்

ஏழு வில்லன்களாக விஜய் சேதுபதி, சம்பத் ராம், செம்பன் வினோத், கோகுல், மகாதேவன் கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்ற இரண்டு வில்லன்கள் யார் என்பது ஷுட்டிங்கின் போது தெரிய வருமாம். அதே சமயம் ஃபகத் ஃபாசில், நரேன் ஆகியோர் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள் என இதுவரை தெரியவில்லை.

கமலுக்கு ஜோடி யார்

கமலுக்கு ஜோடி யார்

அதே போல் கமலுக்கு ஜோடி யார் என்பதும் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் தான் படத்தின் முக்கிய கேரக்டராம். கதையின் அனைத்து கேரக்டர்களுடன் தொடர்புடைய கேரக்டர் என்றும், இந்த ரோலில் பிரபல நடிகை ஒருவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X